பக்கம் எண் :

983
 
2726.பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்

பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்

துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்

தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த

மருந்தவன்காண் வையகங்கள் பொறைதீர்ப் பான்காண்

மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா

திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

2


உடைமை பற்றி. குமைத்த - அழித்த. குவலயம் - பூமி. கலிக்கும் - ஒலிக்கின்ற; இடிக்கின்ற: இதற்கு, 'மேகம்' என்னும் வினைமுதல் வருவிக்க. 'கலிக்கும்' என்னும் பெயரெச்சம், 'மின்' என்னும் கருவிப்பெயர் கொண்டது; மின்னலும் இடியும் புலப்பாட்டு வகையால் முறையே காரண காரியங்களாகக் கூறப்படும். கனம் - பெருமை. 'மேனியில் கலந்த' என்க. ஊர்தல் - தவழ்தல். 'நிறைய' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ஆர்ந்த - பொருந்திய; 'நிலவுலகில் வந்த' என்றபடி நிமிர்சடை - நீண்டசடை, "எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி" என்றது. கோ நகராய சிறப்புப்பற்றி; இனி, 'எழிலாரும் பொழிலார் ஏகம்பம்' என ஏகம்பத்திற்கு அடையாக்கலுமாம்; 'அம்மை இங்கு வழிபடுதற் பொருட்டு திருநந்தனவனம் ஒன்றை ஆக்கினார்' எனவும்' 'அஃது, 'அம்பிகாவனம்' என்னும் பெயருடையது எனவும் இத் தலபுராணங் கூறுதலும், இதனை அடுத்துள்ள 'அம்பி. என்பதோர் ஊரே அத்திருநந்தனவனமாக இஞ்ஞான்று சொல்லப்பட்டு வருதலும், "ஏரி யிரண்டும் சிறகா" (தண்டி) என்னும் வெண்பாவினுள், "காருடைய பீலி கடிகாவா" எனக் காணப்படுதலும் இங்கு நினைத்தற்கு உரியன; "கடிகாவா" என்பதற்கு வேறு பொருள் கூறுவாரும் உளர். கச்சியில் உள்ள எண்ணிறந்த தலங்களுள், ஏகம்பம் முதல் தலம் என்க. "அவன் என் எண்ணத்தான்" என்றருளியது. சுவாமிகளுக்கு அப்பெருமானிடத்துள்ள அழுந்திய ஆர்வத்தைப் புலப்படுத்தும். இவ்வாறே, அவனை, "என் மனத்தே வைத்தேனே" (தி.4. ப.7.) என ஒரு திருப்பதிகத்தை முன் அருளிச்செய்தார். சேக்கிழாரும், "திருவே கம்பர் தமை - நேர்ந்த மனத்தில் உறவைத்து நீடு பதிகம் பாடுவார்" (தி.12 தி.நா.பு. 323) என சுவாமிகள் புராணத்துட் கூறினார்.

2. பொ-ரை: பல உயிர்களாகி எங்கும் பரந்தவனாய், தன்னை வழிபட்டு எழுபவருடைய பாவங்களையும் வினைகளையும் போக்கியவனாய், தூய பூக்களாலாகிய முடிமாலையை உடையவனாய், உலகைப்படைத்துக் காத்து