| 2731. | அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி | | | அழல்வண்ணத் தில்அடியும் முடியுந் தேடப் | | | பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும் | | | பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால் | | | கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் தான்காண் | | | கடலில்விடம் உண்டமரர்க் கமுத மீய | | | இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. | 7 |
| 2732. | முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் | | | வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம் | | | பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண் | | | பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி | |
7. பொ-ரை: பாடலை விரும்பி, உடல் அசைந்து கூத்து நிகழ்த்தியவனாய், தன் தீப்பிழம்பாகிய வடிவில் அடியும், முடியும், மாலும் அயனும் தேட, அவர்களுக்கு இரங்கியவனாய், பேய்க் கூட்டங்கள் முன் நின்று துதித்துப் புகழும் இயல்பினனாய், தன்னை முன் நின்று துதித்துத் தியானிப்பவர்பால் மனம் இளகியவனாய், யானைத் தோலைப் போர்த்தவனாய், கடலின் விடத்தை உண்டு தேவர்களுக்கு அமுதம் ஈய மனம் பொருந்தியவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே. கு-ரை: 'பாடல் பேணி நடம் ஆடி அசைந்தான்' எனக் கூட்டி, 'அசைந்து நடம் ஆடினான்' என மாற்றியுரைக்க. 'அசைந்து' என்றது, 'அசைவு இல்லாதவன்' என்பது உணர்த்தி நின்றது. "அடியும் முடியும் தேட" என்றதற்கு, 'மாலும் அயனும்' என்னும் வினைமுதல் வருவித்துக் கொள்க. பசைந்தவன் - இரங்கியவன்; இரங்கியது அவர்கள் துன்பத்திற்கு. பரவி - பரந்து - பரந்து; சூழ்ந்து. பான்மை யான் - தன்மையுடையவன். 'கசிந்தவன்' என்பதும், 'இரங்கியவன்' என்றே பொருள் தரும். கடலில் விடம் - கடலின்கண் எழுந்த நஞ்சு. "இசைந்தவன்" என்றது, அச்செயலுக்கு ஒருவரும் இசைய (உடன் பட) மாட்டாமை குறித்து நின்றது. 8. பொ-ரை:கொடிய கூற்றுவனை அழித்தவனாய், தன் கோபத்தீயினால், வலிய பகைவர்களின் மும்மதில்களும் தீயில் வெந்து அழியுமாறு, வில்லை ஏந்தியவனாய், தலைக்கோலம் அணிந்த வேடத்தானாய்,
|