| முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண் | | | முழங்கிஉரு மெனத்தோன்றும் மழையாய் மின்னி | | | இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. | 8 |
| 2733. | வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்கு | | | வஞ்சன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும் | | | மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம் | | | வானகமும் மண்ணகமும் மற்று மாகிப் | | | பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் தான்காண் | | | பங்கயத்தோன் தன்சிரத்தை யேந்தி யூரூர் | | | இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. | 9 |
நறுமணம் கமழும் கொன்றை மாலையையும், பாம்பையும் தலையில் அணிந்தவனாய், முத்தலைச் சூலத்தை உடையவனாய், மழையாய் மின்னி இடித்தவனாய், உள்ள எழிலாகும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே. கு-ரை: 'வன் கூற்றை முடித்தவன்' எனக் கூட்டுக. கூற்று - இயமன். முடித்தவன் - அழித்தவன். சீற்றத் தீ - சினம் என்னும் நெருப்பினாலே. சாபம் - வில். "பிடித்தவன்" என்றது, அவ்வில் பயன்படாதே நின்றதைக் குறித்தது. மூவிலை வேல் - சூலம். உரும் என - இடியாகி. மழை - மேகம். 'இடித்தற்கு உரிய மேகமாய்' என்பார், 'உருமெனத் தோன்றும் மழையாய்' என்றருளினார். 'மழையாய் மின்னி இடித்தவன்' என்றது, உலகைக் காத்து நிற்கும் கருணையை விளக்கியருளியவாறு. 9. பொ-ரை:தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய், அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய், தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய், நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய், பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி, ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.
|