| 2734. | வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண் | | | வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி | | | விம்மாநின் றழுவார்கட் களிப்பான் தான்காண் | | | விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத் | | | தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண் | | | அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற | | | எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. | 10 |
கு-ரை: 'நினையாதார்க்கு வருந்தவன்; 'வஞ்சன்' என்க. வருந்து - வருந்துதற்கு ஏது; துன்பம்; முதனிலைத் தொழிற் பெயர், ஆகுபெயராய் நின்று, விகுதியேற்றது. அகரம், சாரியை. 'வருந்தான் காண்' என்றும் ஓதுப. 'பிணிகள் தீரும் வண்ணம் மருந்தவன்' என்க; இதன்கண், 'தீரும் வண்ணம்' என்பதற்கு முடிபாக, 'ஆவான்' என்பது வருவிக்க. பரந்தவன். பரவி இருப்பவன்; வியாபி. நடுச்சடையை விடுத்து, திசைக்கு ஒன்றாய் ஆடும் சடைகளை எண்ணி, "சடை எட்டு உடையான்" என்றாராகலின், அஃது, "ஒன்பது போலவர் கோலக் குழற்சடை" (தி.4. ப.18. பா.9.) என அருளிச் செய்ததனோடு மாறுகொள்ளாது என்க. 10. பொ-ரை:'கொடிய பெருமை மிக்க புலித்தோலைப் போர்த்தி, வேதத்தின் பொருளாய், எம் இறைவன் உள்ளான்' என்று சொல்லி, மிடறு தழுதழுத்து, அழும் அடியவர்களுக்கு அருள் வழங்கு பவனாய், காளையை இவர்ந்து திரிபவனாய், கூத்தாடும் பூதங்களின் தலைவனாய், உலகங்களைத் தாங்கும் அற்புதனாய், சொல்லின் அளவைக் கடந்து நின்ற புகழை உடைய எம் தலைவனாய், எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே. கு-ரை: உழுவை - புலி; அதனை, 'மானம்' உடையதாக அருளியது, இடம் வீழ்ந்ததனை உண்ணாமை முதலியன நோக்கி; 'புலி தனது வேட்டத்தின்கண் இடப் பக்கத்து வீழ்ந்த விலங்கினை உண்ணாதிருந்து வலப்பக்கத்து வீழ்ந்ததனையே உண்ணும்' என்பதனை, "கடமா தொலைச்சிய கானுறை வேங்கை - இடம் வீழ்ந்த துண்ணாதிறக்கும்" (நாலடி. 300.), "கடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென - அன்றவண் உண்ணா தாகி வழிநாள் - பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து - இருங்களிற்றொருத்தல் நல்வலம் படுக்கும் - புலி" (புறம் - 190.) என்றாற் போல்வனவற்றால் அறிக. அதள் - தோல்; 'உரி' என்றது' 'உரிக்கப்பட்டது' எனப் பொதுமையில் நிற்ப,
|