| 2737. | நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால் | | | இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக் | | | கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே | | | குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை | | | வாசன்காண் மலைமங்கை பங்கன் தான்காண் | | | வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும் | | | ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. | 2 |
கு-ரை: உரம் - வலிமை. ஒல்க - தளர; அஞ்ச, 'உமையாள் ஒல்கக் களிற்றை உரித்தவன்' என்க. ஓங்காரத்து - ஓங்காரத்தினால் உணர்த்தப்படுகின்ற. ஒருவன் - தன்போல்வார் ஒருவரும் இன்றித் தான் ஒருவனேயாய் நிற்பவன். இதுபற்றியே, சிவபிரானை, "ஏகன்" என வழங்கும் உபநிடதம் (சுவேதாசுவதரம்). "ஞானம்" என்றது, அறியற்பாலனவாய பொருள்களை; அவை பொருள் இயல்புகள். விரித்தான் - பெரியோர்க்கு விளக்கினான். 'அவ்வாறு விரித்த' என இயைவித்து உரைக்க. வேதத்தான் - வேதத்தை உடையவன்; என்றது, 'அவற்றிற்குத் தலைவன்' என்றவாறு; "வித்தையெல்லாவற்றிற்கும் தலைவ" (சிவபிரான்) என்கின்றது மகோபநிடதம். விதியினால் - ஊழின்படி. தெரித்தவன் - படைத்தவன். 'எங்கும் சில்லுருவாய்' எனக் கூட்டுக. "உரு" என்றது, தெய்வங்களை. பன்மை கூறாது சின்மை கூறியது அவற்றது இழிவு தோன்ற என்க; "சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்" (தி.9 திருப்பல்லாண்டு. 4.) என்றருளியதுங் காண்க. திரண்டவன் - அவற்றது ஆற்றல்கள் பலவும் தனது ஆற்றலேயாக நிறைந்து நிற்பவன். 2. பொ-ரை: அடியார்க்கு அன்பனாய், தன்னிடம் அன்பு இல்லாத கீழ்மக்களை நினைத்துக் கூசி அகல்பவனாய், தன்னை வணங்குதற்கு நாணாதவர் மனத்தின் கண் எளிமையாய்த் தங்கும் இளையவனாய், அழகிய மணம் கமழும் கொன்றையை அணிந்தவனாய், பார்வதி பாகனாய், தேவர்கள் எப்பொழுதும் வணங்கித் துதிக்கும் எழிலாரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே. கு-ரை: 'நேசர்க்கு நேசன்' என்க. "நீசர்தம்மை' என்பதன்பின், 'அணுகுதற்கு' என ஒரு சொல் வருவிக்க. கூசன் - கூசுதலுடையவன்; கூசுதல் - நாணுதல்; "நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே" (தி.5. ப.90. பா.9.) என்றருளினமை காண்க.
|