| 2738. | பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும் | | | புண்ணியன்காண் நண்ணியபுண்டரிகப்போதின் | | | மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் தான்காண் | | | வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப் | | | பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப் | | | பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும் | | | இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. | 3 |
கூசாதார் - மாண்பு இறந்த மானங் காரணமாகத் தன்னை வணங்கிக் கூசியொழியாதவர்கள். 'நெஞ்சின்கண்' என உருபு விரிக்க. 'தஞ்சம்' என்பது கடைக் குறைந்து நின்றது. "தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டு" (தொல். சொல். 266.) என்பவாகலின், "தஞ்சே குடி கொண்ட" என்பதற்கு, 'எளிமையாகக் குடிகொண்ட' என உரைக்க. 'கொன்றை வாசன்' என்றதற்கு 'வாசக் கொன்றையன்' என்பது கருத்தாகக் கொள்க. 3. பொ-ரை: பூமி முதலிய எழு உலகங்களையும் தாங்கி, மேம்படும் பாரத்தைச் சுமப்பவனாய், புண்ணியனாய், தாமரையில் உறையும் வேதா எனப்படும் பிரமனாய், அவனைப்படைத்த திருமாலாய், நீண்ட சடையில் பாம்போடு பிறையைச் சூடியவனாய், பிறையைப் போன்ற பற்களையும் பிளந்த வாயையும் உடைய பேய்களோடு சுடுகாட்டில் இரவில் கூத்து நிகழ்த்தும் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே. கு-ரை: பொறை - பொறுத்தல்; தாங்குதல்; 'அதனை உடையவன்' என்றருளினமைக்குக் காரணமாக, "பூமி ஏழ்தாங்கி" என்றருளினார், "பூமி" என்றது, 'உலகம்' என்னும் பொருட்டாய் நின்றது. புண்டரிகப் போது - தாமரை மலர். மறையவன் - பிரமன்; அவனைப் பயந்தவன் (பெற்றவன்) திருமால். "அணிந்து" என்னும் வினையெச்சம், "பிறையவன்" என்னும் வினைக்குறிப்புப் பெயர் கொண்டது; 'அணிந்த' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். பிறை திகழும் - பிறைபோல விளங்குகின்ற. எயிறு - பல். பேழ்வாய் - பெரிய வாய். எல்லி - இரவு.
|