பக்கம் எண் :

996
 
2739.பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்

பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற

சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்

செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்

பேரவன்காண் பேரா யிரங்க ளேத்தும்

பெரியவன்காண் அரியவன்காண் பெற்றம் ஊர்ந்த

ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

4

2740.பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்

பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்

மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்

வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்


4. பொ-ரை: பூமியாய், வானமாய், வெள்ளத்தை உடைய கடலாய், பனி உறையும் மலைகளாய், இரவாய்ப் பகலாய் உள்ள சிறப்பை உடையவனாய், திசைகளாய், திசைகள் எட்டின் கண்ணும் செறிந்தவனாய், அடியவர்கள் சிறப்பாகத் தியானிக்கும் பெயர்களை உடையவனாய், ஆயிரம் பெயர்களால் போற்றப்படும் பெரியவனாய், அடியார் அல்லார்க்குக் கிட்டுதற்கு அரியவனாய், காளையை இவரும் அழகினை உடையவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.

கு-ரை: பார் - பூமி. விசும்பு - ஆகாயம். பௌவம் - கடல். பனி வரைகள் - குளிர்ந்த மலைகள். சீரவன் - புகழை உடையவன். திசையவன் - திசைகளாய் இருப்பவன்; அகரம் சாரியை. 'எட்டின்கண்ணும்' எனவும், 'ஆயிரங்களால்' எனவும் உருபுவிரிக்க. 'சிந்திக்கப்படும் பெயர்களை உடையவன்' என்க; அவை, 'சிவன்' முதலியன; அவைதாம் சிந்திப்பார்க்கு அகஇருளைப் போக்குவனவாதல் அறிக. ஏத்தும் - புகழப்படுகின்ற. 'பெற்றம்' ஈண்டு, இடபம், ஏரவன் - அழகினை உடையவன்.

5. பொ-ரை:பெரிய தவக்கோலத்தையும், தலைக்கோலத்தையும் உடையவனாய்ப் பிறையைச் சூடியவனாய், அடியேனுடைய துன்புறுத்தும் நோயைத் தீர்க்கும் மருந்தாய், மந்திரங்களாய், தேவர்கள் வணங்கும் பெருந்தேவனாய், மிக்க தவத்தை உடைய பார்வதி பாகனாய், தேவர்கள்