| அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் | | | அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த | | | இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. | 5 |
| 2741. | ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்கம் ஆறும் | | | அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை | | | காய்ந்தவன்காண் கண்ணழலாற் காமன் ஆகங் | | | கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப் | | | பாய்ந்தவன்காண் பண்டுபல சருகால் பந்தர் | | | பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம் | | | ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. | 6 |
அர்ச்சனை செய்து துதிக்குமாறு இருப்பவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே. கு-ரை: தவத்துப் பிஞ்ஞகன் - தவக்கோலத்தையும் தலைக்கோலத்தையும் உடையவன். வாதை - துன்பம். மாதேவன் - தேவர்கட்குத் தேவனாகிய பெருந்தேவன். 'தவத்தாளும் ஆயிழையாளும் ஆகிய உமையாள்' என்க. 'அவளது கூற்றினை விரும்பியவன்' என்பதாம். அமர்தல் - விரும்புதல். கச்சியில் அம்மை காமக் கோட்டத்து எப்பொழுதும் தவம் புரிபவளாதல் அறிக. 6. பொ-ரை:அரிய வேதங்களையும், ஆறு அங்கங்களையும் ஆராய்பவனாய், படம் எடுத்து ஆடும் பாம்பு, எலும்பு, ஆமை இவற்றை அணிந்தவனாய், கண்ணிலிருந்து புறப்பட்ட தீயினால் மன்மதனுடைய உடம்பை எரித்தவனாய், வெகுண்டெழுந்த கூற்றுவனுடைய உடம்பு அழியுமாறு காலால் பாய்ந்தவனாய், ஒரு காலத்தில் பல சருகுகளைத் தன் வாயிலிருந்து வெளிப்படும் நூலால் இணைத்துத் தனக்கு நிழல் தரும் பந்தலை அமைத்த சிலந்திக்கு நாட்டை ஆளும் செல்வத்தை ஈந்தவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே. கு-ரை: 'ஆறு, என்பு, ஆமை, ஆகம்' என்பவற்றில் இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கது. ஆய்ந்தவன் - ஆய்ந்தான் போலும் உணர்வுடையவன். "ஆமை" என்பதில் உம்மை தொகுத்தலாயிற்று.
|