பக்கம் எண் :

330
 

73. (வட) திருமுல்லைவாயில்

சோழ நாட்டில் முல்லைக் கொடியைத் தலவிருட்சமாக உடைய திருமுல்லைவாயில் என்னும் தலம் தென் திருமுல்லைவாயில் எனப்பெறும். இது வடதிசையில் இருப்பதால் வடதிருமுல்லைவாயில் என்றும் வழங்கப்படும். இதற்கும் தர விருட்சம் முல்லைக் கொடி.

சென்னைக்கு மேற்கேயுள்ள அம்பத்தூர் தொடர்வண்டி நிலையத்துக்கு வடமேற்கே மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது.

இங்கு வேட்டையின் பொருட்டு வந்த தொண்டைமான் வேந்தனது யானையில் காலில் முல்லைக் கொடி சுற்றிக் கொண்டது. அதனை வேந்தன் வாளினால் வீசினான். அது பொழுது இறைவர் வெளிப்பட்டு அவர்க்கு அருள் செய்தருளினார். இச்செய்தி,

'சொல்லரும் புகழான் றொண்டைமான் களிற்றைச்

சூழ்கொடி முல்லையாற் கட்டிட்டு

எல்லையில் இன்பமவன்பெற வெளிப்பட்டருளிய விறை

வனேயென்றும்

நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்'

என்னும் இவ்வூர்ப்பதிகம் பத்தாம் திருப்பாடலின் அடிகளால் அறியக் கிடக்கின்றது.

இத்தலம் முருகப் பெருமானால் பூசிக்கப்பட்டது. சோழன், காமதேனு, வசிட்டர் இவர்கள் வழிபட்டுள்ளனர்.

சுவாமி சந்நிதியில் இரண்டு எருக்கந் தூண்கள் இருக்கின்றன.

இறைவர் : - மாசிலாமணி ஈசர். இறைவி : - கொடியிடை நாயகி.

1 கல்வெட்டு :

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில், பரகேசரிவர்மன் உத்தமசோழன், முதலாம் இராசேந்திர சோழன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும்;


1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1904, No. 662 - 684.