பக்கம் எண் :

333
 

பேறுபெற்றனர். சுவாமிசந்நிதி கட்டுமலைமேல் இருக்கின்றது. கோயிலைச்சுற்றிக் கிழக்குப்பக்கந்தவிர அகழி சூழ்ந்திருக்கிறது. மாடக்கோயிலுள் ஒன்று. சுந்தரமூர்த்திநாயனார், திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் 'சொல்லியவே சொல்லி ஏத்துகப்பான்' என இருவர் பாடல் சிறப்பையும் எடுத்துக் காட்டுகிறார்.

சுவாமி பெயர் மனத்துணைநாதர். அம்மை பெயர் மாழையங்கண்ணி. தலவிருட்சம் புன்னை. தீர்த்தம் காரணர் கங்கை.

கல்வெட்டு :

படியெடுத்தன ஒன்பது உள்ளன. இராஜேந்திரன் III காலத்தன மூன்று. குலோத்துங்கன் காலத்தன இரண்டு. இராஜராஜன் III காலத்தன இரண்டு. சுந்தரபாண்டியன் காலத்தன இரண்டு. இத்தலம் அருமொழித் தேவ வளநாட்டு வலிவலக் கூற்றத்து உபயகுல சுத்த சதுர்வேதி மங்கலமான வலிவலம் என்று வழங்கப்பட்டது. இறைவன் மனத்துள் தேவர் என்றே கல்வெட்டுகளில் 1 அழைக்கப்படுகிறார். உடையார் மனத்துள் நாயனாரது கோயில் காரியம் பார்ப்பார் சிலரால் தேவப்பெருமான் திருமடத்து எதிர் ஒப்பிலாதார் சோமநாத தேவ முதலியாருக்கு நிலம் மாற்றிக் கொடுக்கப்பட்டது 2. இந்தத் திருமடம் மனத்துள் நாயனார் கோயிலுக்குத் தெற்குப் பக்கத்தில் இருக்கிறது 3. தென் விடங்கலூர், குலோத்துங்க சோழ நல்லூர் திரிசூலம், பொன் வேய்ந்த பெருமாள் நல்லூர் முதலிய கிராமங்கள் பல வேறு காரியங்களுக்குத் தானமாக அளிக்கப்பெற்றமை அறியப் பெறுகின்றன. திருமூல தேவர் திருமடத்தில் இருந்த கோயில் அர்ச்சகர் ஒருவர்க்கு நிலம் விற்கப்பெற்றது என்பதால் திருமூலதேவர் மடம் என்பது ஒன்று இருந்தமை புலனாகும்.

76. திருவன்பார்த்தான் பனங்காட்டூர்

இது வன்பாக்கம் என்னும் ஊரை அடுத்துப் பனையைத் தலவிருட்சமாக உடைமையால் இப்பெயர் பெற்றது என்பர். இக்காலம் திருப்பனங்காடு என்று வழங்கப்படுகிறது.

திருக்கச்சி ஏகம்பத்துக்குத் தெற்கே நான்கு கி. மீ. இல் உள்ள 


1 110 of 1911, 

2 108 of 1911, 

3 109 of 1911.

4 116 of 1911.