ஐயன் குளத்தை அடைந்து, அங்கிருந்து மேற்கே ஆர்க்காட்டுக்குப் போகும் பெருவழியில் ஏழு கி. மீ. சென்று பின் வடக்கே 1 கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். இங்கே இரங்ணடு சந்நிதிகள் இருக்கின்றன. தெற்கிலிருப்பது அகத்தியர் பூசித்தது. இங்குள்ள இறைவரின் திருப்பெயர் : - பனங்காட்டு நாதர். இறைவியாரின் திருப்பெயர் : - அமிர்தவல்லி. வடக்கிலிருப்பது :- புலஸ்தியர் பூசித்தது. இங்குள்ள இறைவர் : - கிருபா நாதேஸ்வரர். இறைவி : - கிருபா நாயகி. தீர்த்தம் : - ஜடாகங்கை 1கல்வெட்டு : ஆளுடையார் திருப்பனங்காடு உடையநாயனாரின் திருக்கோயிலில், சோழமன்னர்களில் முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் இராசாதி ராசதேவன், முதலாம் குலோத்துங்க சோழன் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், அவர்கள் காலங்களிலும்; விஜய நகர வேந்தர்களில் வீர அரியண்ண உடையார் மகன் விருப்பண்ண உடையார், கண்ட கட்டாரி சாளுவநாச நாயக்க உடையார் மகன் கிருஷ்ணதேவராயர், வீரபொக்கண்ண உடையார் மகன் கம்பண்ண உடையார், அச்சுத அய்ய தேவமகா ராயர், அரியண்ண உடையார் மகன் தேவராய உடையார் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவர், திருப்பனங்காடு உடையார், ஆளுடையார் திருப்பனங்காடுடைய நாயனார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். இவ்வூர், சயங்கொண்ட சோழ மண்டலத்து, காலியூர்க் கோட்டத்து, கழுமலநாட்டுத் திருப்பனங்காடு என்று முதற் குலோத்துங்க சோழன் கல்வெட்டிலும், விருப்பண்ண உடையார் மகன் அறியண்ண உடையார் கல்வெட்டில் காலியூர்க் கோட்டத்து கழுமலநாட்டுப் பிரம தேசப் பற்று திருப்பனங்காடு என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் தென் சுவரில் உள்ள கல்வெட்டு இக் கோயிலில்
1 See the Annual Reports on south Indian Epigraphy for the year 1906 No. 233 - 254 and A.R.E. 1923 No. 421.
|