மூவராலும் பாடப்பெற்றது. மூன்று பதிகங்கள் இருக்கின்றன. கல்வெட்டு : இக்கோயிலில் இருபத்தேழு கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் ஏழு பிற்காலச் சோழர்களது. ஏழு பாண்டியர்களுடையனவும், ஒன்று நாயக்கரதுமாம். திருவாஞ்சியம் குலோத்துங்க சோழவளநாட்டில் பனையூர் நாட்டில் திருவாஞ்சியம் எனக் கூறப்பட்டது. இவ்வூருக்கு இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்ற மறுபெயர் உண்டு. நிலவிற்பனை, நிலதானம் வரி தள்ளுபடி இவைகளைப் பற்றிக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இரண்டாம் இராஜராஜதேவன் கல்வெட்டு ஒன்று கோயிலில் சேர்ந்த நிலங்களின் வரிசையைக் கூறுகிறது. இவ்வரசன் காலத்தில் அம்மனுக்கு ஒரு கோயில் கட்டப்பட்டு, பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. அப்போது நிலமும் வீடும் தானம் செய்யப்பட்டன. குலோத்துங்கக் காலத்தில் திருப்பள்ளியறை நாச்சியாருக்குக் கோமாங் குடியான் ஒருவன் நிலதானம் செய்தான். மங்களாம்பாள் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டின்படி, இராஜராஜதேவன் II காலத்தில் (கி. பி. 18) திருவாஞ்சியமுடையார் கோயிலில் அம்மனுக்கு ஒரு கோயில்கட்டிப் பிரதிட்டை செய்யப்பட்டது. அப்போது நிலம் வீடுகள் தானம் செய்யப்பட்டன. ஒரு நிலத்தில் இருந்த கல்வெட்டின்படி, சிதம்பரத்துப் பிச்சை மடத்து அகோர சிவாசாரியார் சீடர் அச்சுற்ற மங்கலத்துப் பெருமாநாயனார் பண்டாரம் அம்மடத்திற்கு முண்டு வான்சேரியில் ஒரு வேலி நிலம் வாங்கியதாகக் கூறப் பெற்றுள்ளது. 78. திருவாழ்கொளிபுத்தூர் இவ்வூர் மதுரை, இராமசுவாமிப்பிள்ளை என்னும் ஞான சம்பந்தப் பிள்ளையால் அச்சிடப்பெற்ற தேவாரத்தில், வாள் கொளி புத்தூர் என்றும், வேறுசில பதிப்பில், வாளொளி புற்றூர் என்றும் காணப்பெறுகின்றது. சேக்கிழார், பெரியபுராணத்தில் திருவாழ்கொளிபுத்தூர் என்றே குறித்துள்ளனர். மயிலாடுதுறை - சிதம்பரம் தொடர்வண்டிப் பாதையில், நீடூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே 9. கி. மீ. தூரத்தில் இருக்கிறது. இக்காலம் மயிலாடுதுறை, மணல்மேடு ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதியும் உண்டு. வைத்தீசுவரன் கோயிலுக்கு நேர்
|