பக்கம் எண் :

337
 

மேற்கிலும் 10 கி. மீ. அளவே.

இறைவர் திருப்பெயர் மாணிக்கவண்ணர். இது திரு மேனியின் ஒளிகாரணமாக ஏற்பட்ட திருப்பெயராகும். இப்பெயரைச் சுந்தரமூர்த்தி சுவாதிகள் இவ்வூர்க்குரிய ஒவ்வொரு திருப்பாட்டிலும், 'வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என்நினைக்கேனே' என இப்பெயரை எடுத்தாண்டுள்ளார்கள்.

இறைவி திருப்பெயர் வண்டமர் பூங்குழலி, இத்திருப் பெயரை, ஞானசம்பந்தர் இவ்வூர்ப் பதிகம் (பண் - தக்கராகம்) பாடல் எட்டில் "வண்டமர்பூங்குழல் மங்கையொர் பாகமாயவன்" என்று குறித்தருளினார்.

திருமால், அர்ச்சுனன் இவர்கள் பூசித்துப் பேறுபெற்றார்கள். துர்க்காதேவியாரும் வழிபட்ட தலம். துர்க்கைக்கு வழிபாடு அத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. வாசுகி வழிபட்ட தலம். அவ்வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிடேக பூஜை நடக்கின்றது. அருச்சுனனது வாளாயுதத்தை ஈசுவரன் மறைத்துவைக்கும் ஆற்றால் அவனை ஆட்கொள்ளக் கருதினார். வாளை எடுத்துச்செல்லும் வழியில், அவன் அதைத் தேடிவர, வாகையிலைகளை அறிகுறியாக இட்டுச்சென்றான். வாளிருந்த இடத்தில் வாசுகி மறைந்திருந்தது. அதை வழிபட்டு வாளைப் பெற்றான் அருச்சுனன். அக்காரணத்தால் வாளொளிபுற்றூர் என்று பெயர் வழங்கலாயிற்று.

தலவிருக்ஷத் வாகை. நெடுங்காலம் அதுநின்றது. நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் (கி. பி. 1951) அது பட்டுவிட்டது. ஆனால்,

"வாகை நுண்டுளி வீசும்
வாழ்கொளி புத்தூரு ளாரே".

எனவரும் தேவார அடிகளிலே இன்று அந்த வாகை வாழ்கிறது.

திரிசிரபுரம் மகாவித்துவான், திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற தலபுராணம் அச்சில் வெளிவந்துள்ளது. இப்புராணத்தை எழுதுவித்தவர் புலவர், திரு. அ. ஐயாத்துரைப் பிள்ளை அவர்கள்.

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, சுந்தரர் பரிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.