பக்கம் எண் :

41
 

வழிபாடு செய்யும் உழைப்பால் அவன் செய்த வினைப்பயனைக் கழித்துக் கொள்ளலாம் என்பதே சமயாசாரியர்கள் கருத்து.

கொன்று செய்த கொடுமை நீங்க:

திருநாவலூர் முதலிய தலங்களை வணங்கி வழிபட்டுத் தொண்டைநாட்டுத் தலமாகிய திருக்கழுக்குன்றத்தை அடைகின்றார். "கொல்வதைப் போல் துன்பத்தைச் செய்பவர்களே! நீவீர் சென்று பல தலங்களிலும் உள்ள இறைவனைத் தொழுமின்கள். அதிலும் திருக்கழுக்குன்றை வழிபடுவீர்களாக. உம்மைப்பற்றி நின்ற வினைகள் நீங்கும் என்கிறார். கொன்று செய்த கொடுமை தாம் பல நீங்கவே என்பதற்கு இப்படிப் பொருள் கொள்கிறார் அருணையார். திருவள்ளுவரும் இதற்குத் துணை செய்கிறார். "கொன்றன்ன இன்னா செய்யினும்" என்பது அவர் வாக்கு. கொலைக்குச் சமமான துன்பங்கள் செய்தவனுக்கும், பிழையுணர்ந்து மனமுருகி வழிபட்டால் அருள்புரிகிறார் பெருமான். மேலும் நீளநின்று தொழுமின், நித்தலும் தொழுமின், நீதியால் தொழுமின், இப்படித் தொழுதால் நம்மை ஆள இருக்கும் வினைகள் குறைகள் அழிந்திடும் என்கிறார். வெளிறு - அறியாமை. "அறியாமை அகன்று அறிவு பெற வேண்டுமானால் கழுக்குன்றப் பெருமானை வழிபடுங்கள்" என்கிறார். "வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியே" என்பது அப்பாடற்பகுதி. புலை - கீழ்மை "கீழான ஒழுக்கம் உடையவர்களா நீங்கள், கவலைப்பட வேண்டாம். பெருமானைத் தொழுங்கள். கீழ்மை அகன்று மேன்மை பெறலாம். வாருங்கள்" என்றழைக்கிறார். "புலைகள் தீரத் தொழுமின், புன்சடைப் புண்ணியன் அருள் புரிவான்" என்கிறார். பிழைகள் செய்பவரா நீவீர், பரவாயில்லை. அக்குறை தீரப் பெருமானை வழிபடுங்கள். பிழைகள் நீங்கிப் பெருமை பெறலாம். "பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்" என்பது அப்பாடல் பகுதி (தி. 7 ப. 81 பா. 9).

சுந்தரர் திருக்கயிலையில் மாதர்மேல் மனம்போக்கிய தினையளவு மையலினால் பெருமான் இவரைப் பூவுலகிற்கு அனுப்பினார். சுந்தரரோ, "இருவரால் இப்பிறவியை எம்பெருமான் அருளால் எய்துவித்தார். மருவும் பரவை ஒருத்தி, இவள் மற்றவளாம்" என மருண்டார். இம்மருட்சியெல்லாம் சுந்தரர் இரண்டாம் முறை திருவஞ்சைக்களம் சேர்ந்தபோது அறவே அகன்றன. எனவே தம் நிலையை, அற்றவர்க்கு அற்ற சிவனிடம், அஞ்சைக்களத்து அப்பனிடம் "வெறுத்தேன் மனை வாழ்க்கை விட்டொழிந்தேன், விளங்கும் குழைக்காதுடை வேதியனே" என்று முறையிட்டார். பெருமானும் வேண்டுகோளை ஏற்று, இந்திரன் மால்