திரு. சிவக்கொழுந்து தேசிகரால் இயற்றப்பெற்றது. இதுவன்றி, பிருகதீசுவர மாகாத்மியம், சமிவன க்ஷேத்திர மாகாத்மியம் என்னும் இரண்டு வடமொழிப் புராணங்கள் இருக்கின்றன. இராசராசேச்சரத்தில் கருவூர்த்தேவர் செய்த அற்புதச் செயல்: முதலாம் இராச ராச சோழன், இராசராசேச்சரத்தைக் கட்டியபின்னர் சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்க்க மருந்து சாத்தியும், அது இளகிய நிலையில் இருந்தது. அது பொழுது போகர் விடுத்த திருமுகப்படி, கருவூர்த் தேவர் தஞ்சைக்கு வந்து, இராச ராசேச்சரத்துப் புகுந்து, தம் வாயில் உள்ள தம்பலத்தை மருந்தாக உமிழ்ந்தார். பின் அது இறுகிற்று. இக்கோயிலில் கருவூர்த்தேவரின் பிரதிமம் இருக்கின்றது. கல்வெட்டு வரலாறு1 இராச ராசேச்சரம் என்ற தொடர்க்குப் பொருள்: இத் தொடர் இராசராச சோழனால் கட்டப்பெற்ற கோயில் என்று பொருள்படும். (ஈச்சரம் - கோயில்.) இக்கோயிலில்
1. See the Annual reports on South Indian Epigraphy for the years 1888, 1890 1891 1893 1897 1911 1918 1924 1925 1928 1933 | Numbers ,, ,, ,, ,, ,, ,, ,, ,, ,, | 65 52 35 55 20 274 552 414 349 1II 202 | - - - - - - - | 114 53 43 58 41 275 425 351 | and the south Indian Inscriptions Volume ,, ,, ,, | II II II II | Nos. ,, ,, ,, | 1 - 56 65 - 66 67 - 70 4,32,63,64 and 78-97 |
|