தஞ்சாவூர் என்னும் பெயர்க்காரணம்: ஆனந்தவல்லி அம்பிகை, தஞ்சகாசுரன் என்பவனை வதம் செய்த காலத்து, அவ்வசுரன் அம்பிகையை நோக்கி ‘‘இத்தலம் அடியேன் பெயரால் வழங்கவேண்டும்’’ என்று வரம் பெற்றமையால், தஞ்சாபுரி என்று வழங்கப்பெற்றது என்பர். இவ்வூர்க்குள்ள வேறு பெயர் : குபேரன் பூசித்துச் சிலகாலம் இருந்தமையின் இவ்வூர் அளகை என்னும் பெயர் பெற்றது. இறைவரின் திருப்பெயர்: தஞ்சைப் பெருவுடையார் என்பது இலக்கியத்தில்கண்ட பெயர். வடமொழியில் பிரகதீசுவரர் என்பர். இறைவியாரின் திருப்பெயர்: பெரியநாயகி என்பது வடமொழியில் பிருகந்நாயகி என்பர். பெருமை: கருவூர்த்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பாப் பெற்றது. “பாரிற், கருவிசையை நீத்த கருவூரர் போற்றும், திருவிசைப்பாவுகந்த தேவே’’ என்பர் திரு. சிவக்கொழுந்து தேசிகர் (தஞ்சைப் பெருவுடையார் உலா. 300-301) தஞ்சைவிடங்கர்: சோழ மன்னர்கள், திருவாரூர்த் தியாகராச மூர்த்தியிடம் பற்றுடையவர்கள். ஆதலால் அவர்கள் இந்த இராச ராசேச்சரத்தில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தியாகராச மூர்த்தியாகவே எண்ணி, அம்மூர்த்திக்குத் திருவாரூரில் நடைபெறும் சிறப்புக்களை எல்லாம் இத்தலத்தில் இவருக்கும் நடத்திவந்தனர். தஞ்சைவிடங்கர் என்பது இவரின் திருப்பெயர். “ சீரார் கருணைத் தியாகரே _ ஏராரோங் காரரே’’ என்பது (தஞ்சைப் பெருவுடையார் உலா (96 - 97) இத்தலத்திற்குரிய ஆகமம்; மகுடாகமம். தலத்தைப்பற்றிய நூற்கள்: தஞ்சைப் பெருவுடையார் உலா. இது கும்பகோணத்திற்கு அருகில் திருக்கொட்டையூரில் இருந்த முத்தமிழ்ப் புலமைசான்ற |