இத்திருக்கோயிலில் தம் தந்தையாராகிய பொன்மாளிகைத் துஞ்சியதேவர் (இரண்டாம் பராந்தகதேவர்) தமது தாயாராகிய வானவன்மாதேவியார், தட்சிணமேரு விடங்கரின் பிராட்டியார் உமாபரமேஸ்வரியார், தஞ்சை விடங்கரின் பிராட்டியார் உமாபரமேஸ்வரியார் இவர்களின் திருமேனிகளையும்; இராசராசதேவர் தேவிமார்களில் ஓலோகமாதேவியார், பிச்சதேவரையும்: திரைலோக்கிய மாதேவியார், கல்யாணசுந்தரதேவர் இவரது பிராட்டியார் இவர்களையும், அபிமானவல்லியார், இலிங்கபுராணதேவர், பிரமன், விஷ்ணு இவர்களையும், சோழமாதேவியார், இடபவாகனதேவர் இவர் தம் பிராட்டியார் உமாபரமேஸ்வரியார் இவர்களையும்; பஞ்சவன்மாதேவியார், தஞ்சையழகர் இவர் பிராட்டியார் உமாபரமேஸ்வரியார் இவர்களையும்: இலாடமாதேவியார் பாசுபதமூர்த்தி்யையும்; பிருதுவிமாதேவியார் ஸ்ரீகண்டமூர்த்திகளையும்; இராசராசதேவர் அரசியல் அலுவலாளர்களில், அதிகாரிகள் காஞ்சிவாயில் உடையான் உதையதிவாகரன் தில்லையாளியாரான இராசராச மூவேந்தவேளார்,க்ராதார்ஜு ந தேவரையும்;இராசராசதேவர் பெருந்தரம் வேளான் ஆதித்தனான பராந்தகப் பல்லவரையர் உமாசகிதர், இவர் தம் பிராட்டியார்; சுப்பிரமணியதேவர், கணபதியார் இவர்களையும்; இராசராசதேவர் பெருந்தரம், உய்யக்கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டுக் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து நாரக்கன் ஸ்ரீ கிருஷ்ணன் மும்முடிசோழ பிரமாதிராயன், அர்த்தநாரீஸ்வரரையும்; இராசராசதேவர் சிறுதனத்துப் பெருந்தரம் கோவன் அண்ணாமலையான கேரளாந்தக விழுப்பரையன், பிருங்கீசர், சூரியதேவர் இவர்களையும்: ஸ்ரீ காரியஞ்செய்த பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான், திருஞானசம்பந்த அடிகள், திருநாவுக்கரையதேவர், நம்பி ஆரூரனார், நங்கை பரவையார், முதலாம் இராசராச சோழர், இவரது தேவியார் ஓலோகமாதேவியார் “தத்தாநமரே’’ என்ற மிலாடுடையார் (மெய்ப்பொருள் நாயனார்), சிறுத் தொண்ட நம்பி ; திருவெண்காட்டு நங்கை, சீராளதேவர் இவர்கள் பிரதிமங்களையும் ; சந்திரசேகரதேவர், க்ஷேத்திரபாலதேவர் இவர்களின் திருமேனிகளையும்; ஈராயிரவன் பல்லவரையனான மும்முடிச்சோழ போசனான உத்தமசோழப் பல்லவரையன் சண்டேசுவரதேவரையும் எழுந்தருளுவித்துள்ளனர். |