42. செக்கர்-செவ்வானம். உவமை இரண்டற்கும் பொருள், அம்பலவர். சொக்கர்-அழகர். ‘சொக்கராகிய அம்பலவர்’ என்க. சுருதி-வேதப்பொருள்; ஆகுபெயர். எக்கர்- செருக்கு மிக்கவர். ‘‘எக்கராம் அமண் கையர்’’ (திருமுறை 3, 39, 11,) என வந்தமை காண்க. குண்டு - கீழ் இனம். ‘குண்டர்’ என்பதும் பாடம். மிண்டர்-வன்கண்ணர். எத்தர்-வஞ்சிப்பவர். பொக்கர்-பொய்யர். 43. செண்டடித்து-பூச்செண்டு அடித்தல்போல அடித்து; இஃது எளிதில் செய்தமையை உணர்த்திற்று. ‘‘இடபம் ஏறி’ , என்றதனை முதற்கண் வைத்து உரைக்க. ‘‘ஏறி’’ என்ற எச்சம் எண்ணின்கண் வந்தது. ‘‘அம்பலவன்’’ என்றது ஆகுபெயராய் அவனைப் பொருளாக உடைய நூலைக் குறித்தது. கல்லா-கற்காத. ‘கைத்தவர்’ என்பது, ‘கச்சவர்’ என்று ஆகி, ‘கச்சர்’ என இடைக் குறைந்து நின்றது; வெறுக்கப்பட்டவர் என்பது பொருள். ‘‘பசு’’ என்றது, சிறு தெய்வங்களை, நூல், அவற்றைப் பொருளாக உடைய நூல். ‘‘கற்கும்’’ என்றது, ‘‘விரும்பிக் கற்கும்’ என்றவாறு, பிச்சர்-பித்தர். |