83. துந்துபி முதலியன வாத்தியங்கள். அவை அவற்றது ஒலியைக் குறித்தன. வான் இயம்ப-வானளவும் சென்று ஒலிக்க. முழவம்- மத்தளம். அந்தியின் மறை - அந்திக் காலத்திற் சொல்லப்படுகின்ற மந்திரங்களையுடைய (நான்கு வேதங்கள் என்க). மறைப் பொருள்-இரகசியப் பொருள்கள். ‘மறைப் பொருள் அரும்பும்’ என இயையும். 84. மொட்டித்து - குவிந்து. களைகணே -பற்றுக்கோடானவனே. தெளி தேன்-தேன் உண்மையைத் தெளிந்த வண்டுகள், ஆட-பறந்து திரிய. ‘சோலையது சூழ் மொழுப்பில்’ என்க. சூழ் மொழுப்பு-பரவிய மேலிடம். 85. அகம், அந்நெஞ்சின் அகம். ‘நிலைமையோடு கூடி’ என ஒருசொல் வருவிக்க. முதற்றொட்டு, ‘‘எழுந்த’’ என்பது காறும் உள்ளவை, வெஞ்சுடருக்கு அடையாய், இல்பொருள் |