உவமையாக்கின. வெஞ்சுடர்-பகலவனது வெப்பமான கதிர்கள். சுடர்வபோன்று-வீசுவனபோன்று. துளும்பும்-விரிகின்ற. புரிசை-மதில். ‘‘புரிசையும், அகழியும் சூழ்ந்த வட்டத்து அகம்படி’ என்க. அகம்படி-உள்ளிடத்தில். மணி நிரை பரந்த செஞ்சுடர்- மாணிக்கங்கள் பரந்து கிடத்தலால் உண்டாகின்ற செம்மையான ஒளி. அரும்பும்-தோன்றுகின்ற. 86. ‘தீத்திரளின் உருவம்போல’ என உவம உருபு விரிக்க. புந்தியில் - எமது மனத்தில், ‘‘மால்விடையோன்’’ என்றது ஒரு பெயராய், ‘‘வந்த’’ என்றதற்கு முடிபாயிற்று. தூத்திரட் பளிங்கில் தோன்றிய தோற்றம் தூய பளிங்கின் திரளினின்றும் தோன்றிய காட்சி. தோன்ற-காணப்படுமாறு. நா-நாவினால். ‘சிவபெருமானது திருமேனி பளிங்குபோல்வது, திருநீற்றினால்’ என்பது முன்னும் கூறப்பட்டது. ‘நாஓர்ந்து’ என, ஓர்தல், இங்கு, ‘ஓதி’ என்னும் பொருட்டாய் நின்றது. 87. சீர்த்த-சிறப்புப் பெற்ற. திண்புவனம், மண்ணுலகம். ‘‘திசை’’ என்றது. பூமியைச் சூழ்ந்து நிற்கின்ற இந்திரன் |