96. நீலம்-நீலரத்தினம், நித்திலம்-முத்து. நிரைத்து-வரிசைப்பட வைக்கப்பட்டு. முறுவல்-நகைப்பு. ‘‘திருமுகம்’’ என்றதன்பின், ‘இவ்வாறாகலின்’ என்னும் சொல்லெச்சம் வருவிக்க. ‘‘கோலமே, அழகிதே’’ என்ற ஏகாரங்களில் முன்னது அசைநிலை : பின்னது தேற்றம். அச்சோ, வியப்பிடைச் சொல், குழைவர்-மனம் உருகுவார்கள். 97. திக்கு அடா நினைந்து-பலதிசைகளிலும் அடுத்து நினைந்து ; என்றது, (இறைவனை) ‘எங்கும் தேடி அலைந்து’ என்றபடி. இடிந்து-துயருற்று புறத்து இருந்து-ஆட்கொள்ளப்படாமல் இருந்து, அலச-மெலிய. மைக் கடா-கரிய நிறம் பொருந்திய கடா ; எருமைக் கடா இஃது உணர்வின்மை பற்றி வந்த உவமை. ஆள்-அடிமை, ‘‘ஆளாக’’ என ஆக்கம் விருவிக்க. பொய்-நிலையாமை. ‘‘பொய்க்கு’’ என்ற நான்கனுருபை, இரண்டனுருபாகத் திரிக்க. அடா வண்ணம்-பொருந்தாதபடி. ‘‘புரியவும்’’ என்ற உம்மை. சிறப்பு. கல்லில் நார் உரித்ததுபோன்ற செயலாதல் பற்றி, ‘வல்லரே’ என்றார், ‘‘எல்லே’’ என்பது ‘என்னே’ என்பது போன்றதோர் இடைச்சொல் ; இஃது இங்கு இறைவரது கருணையை வியந்த வியப்பின்கண் வந்தது. ‘அக்கடா’ |