பக்கம் எண் :

திருமுறை]9. கோயில்65


98. 
 

மெய்யரே மெய்யர்க் ; கிடுதிரு வான
   விளக்கரே ; எழுதுகோல் வளையாள்
மையரே ; வையம் பலிதிரிந் துறையும்
   மயானரே ; உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க் ; கடுத்தவான் பளிங்கின்
   பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                 (8)
 

99. 
 

குமுதமே திருவாய் ; குவளையே களமும் ;
   குழையதே யிருசெவி ; ஒருபால்
விமலமே கலையும் உடையரே ; சடைமேல்
   மிளிருமே பொறிவரி நாகம் ;
 

என்பது     அமைதிக்  குறிப்புத்  தருவதோர்      இடைச்சொல்லாய்
வழங்கும்,  கலலையின்றி  இருப்பவனை, ‘அக்கடா என்று இருந்தான்’
என்பர்.    ‘‘அக்கடாவாகில்’’    என்றதற்கு,    ‘எனக்கு    அமைதி
உண்டாயிற்றாயின்’  எனவும்,  ‘‘அவர்’’  என்றதற்கு, ‘அதற்கு ஏதுவாய
அவர்’ எனவும் உரைக்க

98.  மெய்யர்க்கு-மெய்ந்நெறியில் நிற்பவர்கட்கு, ‘இடுவிளக்கர்’  என
இயையும்;   ‘ஏற்றப்பட்ட   விளக்குப்போல்பவர்’  என்பது   பொருள்;
அஃதாவது,  ‘இருளை  (அறியாமையை)  நீக்கி ஒளியை   (அறிவை) த்
தருபவர்     என்பதாம்.    திருவான-அழகான.    எழுது     கோல்
வளையாள்-எழுதப்பட்டதுபோலும்    வரிகளை    யுடைய    திரண்ட
வளைகளை  யணிந்த  உமாதேவி.  மையர்-அவளது  கரிய   நிறத்தை
ஒருபால்   உடையவர்.   ‘கோல்வளையை   ஆண்மையர்    (ஆளுந்
தன்மையை  உடையவர்), என்றும், ‘மையலர் என்பது  இடைக்குறைந்து
நின்றது’  என்றும் உரைப்ப. ‘பொய்யர்க்குப் பொய்யரே’  எனக்கூட்டுக;
‘எல்லார்   உளத்திலும்   இருந்தும்,  பொய்யருக்குத்   தோன்றாதவர்’
என்றபடி.  ‘‘பளிங்கின்  பொருள்’’  என்ற  இன்,  அல்வழிக்கண் வந்த
சாரியை,  ‘பளிங்குபோலும்  பொருள்’  என்றவாறு,   பளிங்கு போலும்
பொருள்-மாசு  தீர்ந்த  உயிர்கள்  (முத்தான்மாக்கள்)    அவற்றின்வழி
இருள்கிழித்தெழுதலாவது, சீவன்முத்தர்களது சொல்லாலும்,  செயலாலும்
பக்குவர்களுக்கு மெய்யுணர்வை உண்டாக்குதல், ஐயர்-தலைவர்.

99.     குமுதம்,  இங்குச்  செவ்வாம்பல்   மலரைக்     குறித்தது.
குவளை-நீலோற்பல  மலர். களம்-கழுத்து. ‘குழையது‘   என்பதில் அது,
பகுதிப்பொருள் விகுதி. வேண்டும் சொற்கள்