உம்பர்’ என்க. ‘உனக்கு ஊட்டினர்’ எனச் சொல்லெச்சம் வருவிக்க. ‘‘உய்யேன்’’ என்றது ‘இறந்துபடும் நிலையில் உள்ளேன்’ என்றபடி. வன்பழியாளாராகிய கொடுமை மிகுதி பற்றி ‘ வானவர் கணங்களை மாற்றுதல்’ ஒன்றையே எடுத்துக் கூறினாளாயினும், ‘ஆடுதலை விட்டு எழுந்தருளாய்’ என்றலும் கருத்தாம். என்னை ? ‘ஒழியாது ஆடுதலால் இறைவற்குத் திருமேனி நேரம் என்பது கருதியும் வருந்தினாளாதலின்’. பயலைமை - பசலைத் தன்மை. ‘எழுந்தருளின் இதுவும் தீரும்’ என்றவாறு. 260. ‘‘எழுந்தருளாய் எங்கள் வீதியூடே’’ என்பதனை இறுதியிற் கூட்டுக. ஏதம் - குற்றம். முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலியோர். ‘தில்லைவாழந்தணர்’ எனலும் ஆம். ‘‘கொழுந்தது’’ என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. கொழுந்து, முடிநிலை. ’மாத்திரை’ என்பதும் ஓர் காதணியே. வௌவ-வௌவினமையால் அழுந்தும்-துன்பத்தில் ஆழ்கின்ற. உயிர்க்கு-உயிர் நிற்றற்கு. அலமரும்-அலைகின்ற. ‘நீ எங்கள் வீதியூடே எழுந்தருளினால் என் உயிர் நிற்கும்’ என்றவாறு. 261. ’’சடையினானை’’என்றது, ‘சடையை உடையவனாகிய நின்னை’ என, முன்னிலைக்கண் படர்க்கை வந்த வழுவமைதி. சிலை-வில். வார்த்தை- (வீரச்) செய்தி. ‘‘பேசவும்’’ என்ற உம்மை, ‘பேசுதல் ஒன்றையே பிறர் செய்யவும், எனப்பொருள் தந்து நின்றது, நையும்-(அதனைக் கேட்ட அளவிலே) |