3


விளக்கி  நிலவுகின்றது. இக்கோயில், இந்நாளில் கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப்  போகும்  பெருவழியில், கொள்ளிடப்   பேராற்றுக்குக் கட்டப்பட்டுள்ள   கீழ்  அணைக்கட்டுக்கு  வடக்கேயுள்ள   குறுக்குச் சாலையிலிருந்து மேற்கே சுமார் மூன்று மைல் தூரத்தில்  இருக்கின்றது. இக்காலப்  பிரிவுப்படி, திருச்சிராப்பள்ளி ஜில்லா  உடையார்பாளையந் தாலூகாவில்  அமைந்தது இவ்வூர்.இக்கங்கைகொண்ட சோழேச்சரத்தில் உள்ள இறைவர்க்குப் பெரிய உடைய நாயனார் என்றும்,அம்பிகைக்குப் பெரிய நாயகி என்றும்,பெயர்கள் வழங்கி வருகின்றன.

கல்வெட்டு வரலாறு: 1

இத்  திருக்கோயிலில் சோழமன்னர்களில் விசயராசேந்திரன் (கி. பி.
1051  -  1065  ). வீரராசேந்திரன்  (கி.  பி.  1063  -  1070  ) முதற்
குலோத்துங்கன்  (கி.  பி.  1070  -  1120 ), மூன்றாங் குலோத்துங்கன்
இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் கோமாற பன்மரான
திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவர், கோனேரின்மை கொண்டான்
திரிபுவனச்    சக்கரவர்த்தி   சுந்தரபாண்டிய   தேவர்,   திரிபுவனச்
சக்கரவர்த்தி  கோனேரின்மைகொண்டான்  விக்கிரமபாண்டிய  தேவர்
இவர்கள் காலங்களிலும்; விசயநகரவேந்தர்களில் - மல்லிகார்ச்சுனதேவ
மகாராயர் குமாரர் பிரபுட விரூபாக்ஷராயர் முதலானோர் காலங்களிலும்
பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

கல்வெட்டுக்களினால் அறியப்படும் செய்திகள்:

மாறபன்மன்   திரிபுவனச்   சக்கரவர்த்தி   குலசேகர    தேவன்,
தேவணிபுத்தூர்  என்னும்   ஊரிலுள்ள  நத்தம்,  மனைகள், நன்செய்,
புன்செய்,   தோப்புக்கள்,   ஊருணி,   குளம்   முதலியன   உள்பட
அனைத்தையும்    விலைக்கு   வாங்கி,   அதனைத்   திருநாமத்துக்
காணியாக,  உடையார்   கங்கைகொண்ட  சோழேச்சரமுடையார்க்குக்
கொடுத்துள்ளான்.    விக்கிரமபாண்டியன்     தன்பேரால்    கட்டின
இராசாக்கள் நாயன் சந்திக்கு அமுதுபடி,சாத்துப்படி உள்ளிட்ட நித்த
நிவந்தங்களுக்கு மூலதனமாக குலோத்துங்க


1. See  the  Annual  ;  reports  on South Indian Epigraphy
for the years 1892 Nos. 75 - 83  
     ,,       1903   ,,  29 - 34  
and South Indian Inscriptions (Texts)  
 
    Volume IV Nos. 522 - 530.