நிலம் கொடுக்கப்பட்ட இடங்கள்:- 1. தென்கடுவாயான அருமொழி தேவவளநாட்டு இங்கண் நாட்டுப் பாலையூர், ஆரப்பாழ், கீரன்தேவன்குடி, நாகன்க....... (இவ்வூரின் பெயரில் சில எழுத்துக்கள் சிதைந்துவிட்டன.) தண்ணீர்க்குன்றமான ராஜராஜநல்லூர், உச்சிப்பாடி, கீழ்வடுகக்குடி, கஞ்சாறநகர், ஊசிக்கண்ணங்குடி, ஆர்வலக்கூற்றத்து வடவிறையான்பள்ளம், திருத்தெங்கூர்; 2, வடகடுவாயான க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருநறையூர்நாட்டு அரக்கன்கடி, பிடாரசேரி, வேளாநாட்டு மணற்காலப்பள்ளி; 3, அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்டு நெற்குப்பை; 4, வடகரை இராசேந்திர சிங்கவளநாட்டு இன்னம்பர் நாட்டு மருத்துவக்குடி, கருப்பூர்; திருவாலிநாட்டுத் திருத்தேவன்குடி, குறுவாணியக்குடி; 5, மழநாடான ராஜாஸர்ய வளநாட்டுப்பாச்சிற் கூற்றத்து மீய்பலாற்று ஆன்பனூர்; பாச்சிற்கூற்றத்து கீழ்பலாற்று ஈங்கையூர், பணமங்கலவன் கரைப்பற்றுச் சாத்தன்குடி; கலார்க் கூற்றத்து மாந்தோட்டம், இறையான்சேரி, வெண்கோன்குடிக் கண்டத்து வெண்கோன்குடி, மாகாணிகுடி, செம்புரைக் கண்டத்து சிறுசெம்புறை, துறையூர்; 6. நித்த விநோதவளநாட்டு,வெண்ணிக் கூற்றத்து நகரம் வெண்ணி, பூதமங்கலம், மீதுவேலி், நகரக்காரக் குறிச்சி, வடதாமரை, வெண்ணித் திறப்பான்பள்ளி, அருமொழிதேவ வளநாட்டுத் தக்களூர்நாட்டு நகரம் வேநெல் விடுகுபல்லவபுரம், கொடிமங்கலம் என்னும் ஊர்களாகும். மேற்குறி்த்த ஊர்களில் வெண்ணி, பூதமங்கலம், பூதமங்கலத்துப்பால் மீதுவேலி, நகரக்காரக்குறிச்சி, வடதாமரை, வெண்ணித் திறப்பான்பள்ளி இவ்வூர்களிலுள்ள நிலங்களுக்கு இவ்வூரார் ஐந்நூற்று நாற்பத்தொரு கழஞ்சே மஞ்சாடியும் எட்டுமா பொன்னையும்; தக்களூர்நாட்டு வேநெல்விடுகு பல்லவபுரத்து நகரத்தார் நூற்றறுபத்தேழு கழஞ்சரையே மூன்றுமாமஞ்சாடியும் இருமாவரை பொன்னையும்; ஆர்வலக் கூற்றத்துத் திருத் |