36


இந்த  நிலநிவந்தத்தை  உணர்த்தும்  கல்வெட்டினால்  முதலாம்
இராசராசன் காலத்தில் இருந்த வாய்க்காலின் பெயர்கள்:-

பெருவளவாய்:- இது மழநாடான ராஜாஸரிய வளநாட்டுப் பாச்சில்
கூற்றத்து  மீய்பலாற்று  அன்பனூரில்  குறிக்கப் பெற்று உள்ளது. இது
திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் ஓடுவது.

நாட்டார்  வாய்க்கால்:-  இது   வெண்கோன் குடிக்கண்டத்தில்
 உள்ளது. இதுவும் திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பாய்வதாகும்.

பைங்கேணி  வாய்க்கால்:- இது  பாச்சில் கூற்றத்து  மீய்பலாற்று
அன்பனூரில் குறிக்கப்பெற்றுள்ளது. இது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில்
கொள்ளிடத்தின்   வடபால்   ஓடுகிறது.  இது   மழநாட்டில்  பாயும்
வாய்க்காலில் பெரியது.

பாண்டவயாறு:-இது  விண்ணாற்றிலிருந்து   பிரிந்து   செல்வது
தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ளது.

அறியப்படும் பிடாரிக் கோயில்கள்:

பாச்சில்     கூற்றத்துக்    கீழ்பலாற்றுத்    துறையூரில்  பிடாரி
புன்னைத்துறை  நங்கை, கோயிலும், பிடாரி பொதுவகை ஊருடையாள்
கோயிலும், குதுரை வட்டமுடையாள் கோயிலும் இருக்கின்றன.

வேறுகோயில்கள்:

ஐயன்  கோயில்  (ஐயனார்   கோயில்),  புகழீஸ்வரம்   முதலான
கோயில்கள்.

சில சம்பிரதாயச் சொற்கள்:

இக்கோயிலில்       வழங்கிவந்த         சம்பிரதாயச்சொற்கள்,
திருப்பள்ளித்தாமம்,  திருப்பரிசட்டம்,  திருவொற்றாடை,  திருவமுது,
திருமஞ்சனம்,   திருப்பரிகலம்   முதலானவைகளாகும்.  இவைகளுள்
திருப்பள்ளித்தாமம் - என்பது பூவைக் குறிக்கும். ‘திருப்பள்ளித்தாமம்
பறிப்பார்க்கும்’ என்னும் கல்வெட்டுப் பகுதி இதனை உறுதிப்படுத்தும்.
“ சடைமேலணியத் திருப்பள்ளித்தாமம் பறித்துச் சாத்துவார்’’ என்னும்
இலக்கியச்  சான்றையும்  காண்க.  (பெரிய புராணம்). திருப்பரிசட்டம்
என்பது இறைவர்க்கு அணிவிக்கும் ஆடை. திருவொற்றாடை  என்பது,