38


திரியிட்டு   எரிய  வைத்த  பொலிசைகாசும்’’  என்னும்  கல்வெட்டுப்
பகுதி இனிது விளக்குகின்றது.

இராசராசேச்சர   விமானத்துக்குத்  தட்சிணமேரு   என்ற  பெயர்
உண்டென்பது  சிலரின்  கொள்கை;  அதுவும்  பொருந்துவது அன்று.
இராசராசன்  கல்வெட்டில்  விமானத்தைப் பற்றிக் குறிக்கவந்தவிடத்து
அது ஸ்ரீவிமானம் என்று குறிக்கப்பட்டு உள்ளதே ஒழிய தட்சிணமேரு
என்னும் பெயரால் குறிக்கப்படவில்லை.

ஆடவல்லார்     தட்சிணமேரு       விடங்கர்       என்பது
நடராசப்பெருமானைக்  குறிக்கும்,  விடங்கர்  என்னும்  பல பொருள்
ஒருசொல்    சுயம்புமூர்த்தி   என்னும்   பொருளில்   சப்தவிடங்கத்
தலமூர்த்திகளுக்கு  வழங்கும்.  இதனைப் புராண வரலாறு உணர்ந்தார்
அனைவரும்  அறிவர். அது நடராசப்பெருமானைக் குறிக்க வருங்கால்
பேரழகன்     என்ற         பொருளில்        வரும்.      அது
விடங்கொள்கண்டத்தெம்விடங்கனே யுன்னைத்  தொண்டனேன்
விரும்புமா விரும்பே’’  எனத்  திருமாளிகைத்  தேவர்  தில்லையில்
அருளிய     திருவிசைப்பாவாலும்,    பதினொராம்    திருமுறையில்
திருவாலங்காட்டு  மூத்த  திருப்பதிகத்தில் ‘‘அணங்கு காட்டில் அனல்
கையேந்தி  அழகன்  ஆடுமே’’ என்னும் அம்மையார் திருவாக்காலும்
அறியத்தக்கது.

தில்லை   நடராசப்பெருமான்   முற்கூறியவாறு  விடங்கர்  என்ற
சொல்லால்     அழைக்கப்படுவதன்றி     மேருவிடங்கர்    என்றும்
அழைக்கப்படுவர், அது திருப்பல்லாண்டில், ‘‘வில்லாண்ட கனகத்திரள்
மேருவிடங்கன்  விடைப்பாகன்’’  என  வரும்  சேந்தனார் வாக்கால்
அறியத்தகும்.  தில்லைத்  திருக்கோயிலுக்கு  மேரு  என்னும்  பெயர்
உண்மையை நமது சேக்கிழார் நாயனார்

பெருமதில் சிறந்த செம்பொன் மாளிகை
    மின்பிறங்கு பேரம்பலமேரு
வருமுறை வலங்கொண் டிறைஞ்சிய பின்னர்

    வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்

என அருள்வதால் அறியலாம்.

‘வில்லாண்ட     கனகத்திரள்    மேருவிடங்கன்’    -    என்ற
திருப்பல்லாண்டுக்கு,  வில்லாண்ட  கனகத்திரள் மேருவிடங்கன்  என
ஒருதொடராகவும் மேருவிடங்கர் என்பதை மட்டும் பிரித்து  பிரிதொரு
தொடராகவும்  பொருள்  கொள்ளவேண்டும்.  இரு  பொருளும்  தர
இயைந்து நிற்கும் தொடருக்கு ஒருபொருள்