என இராசராசேச்சரத் திருவிசைப்பாவில் கூறப்பட்டிருப்பதால், அகில்புகை கமழும் மாளிகையும், மகளிர் யாழ்பயில் இடமும் உடையனவாய் மதிலும் கிடங்கும் சூழப் பொலிவுடன் இருந்தது. இத் தஞ்சை மாநகரம். இராசராசேச்சுரக் கல்வெட்டிலும் இராசேந்திரசோழன் திருமதில் என்று திருமதிலின் பெயர் கூறப்பட்டிருப்பதையும் நோக்குக. (S. I. I. Vol. II Page 393) கருந்திட்டைக்குடிக்குத் தென்பால் ஓடும் ஆற்றுக்கு வடவாறு என்று பெயர். அவ்வாற்றின்மூலம் கிடங்குகளுக்கு நீர் பாய்ந்தது. முதலைகளும் அக்கிடங்கில் விடப்பட்டிருந்தன. இராசராசனைப் பற்றிய சிறு குறிப்பு: பிற்காலச் சோழமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் ஒரு நிலைக்களமாய் இருப்பது தஞ்சை இராசராசேச்சரமாகும். மேல்நாட்டாரும் இதனைக்கண்டு விம்மிதம் அடைகின்றனர். இத்துணைச் சிறப்பினையுடைய இதனைக் கட்டுவித்தவன் கி.பி.1985 முதல் கி.பி. 1014 வரை சோழமண்டலத்தை ஈடும் எடுப்புமின்றி ஆண்ட முதலாம் இராசராசசோழன் ஆவன். இவன் சுந்தரசோழன் என வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனது இளைய மகன். இவன் பிறந்தது ஐப்பசிச் சதயநாள். இவனது இயற்பெயர் அருண்மொழித்தேவன், பட்டப்பெயர் இராசகேசரி, இராசராசன் என்னும் பெயர் தில்லைவாழ் அந்தணர்களால் இவனுக்குக் கொடுக்கப்பட்டது (கொங்குதேச இராசாக்கள் என்னும் நூலில் காண்க). இவனது முதற்பெருந்தேவியார் ஓலோகமாதேவியார், இம்மாதேவியார் அன்றி சோழமாதேவி, திரைலோக்கியமகாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமானவல்லி, இலாடமாதேவி, என்னும் தேவியர்களும் இருந்தனர். இவனுக்கு இராசேந்திரன் என்னும் ஒரு மகனும், மாதேவடிகள், குந்தவை II. அருமொழி
1. Professor Kielhorn has examined a number of dates of the king with astronomical details and has come to the conclusion that his accession took place between the 25th June and 25th July 985 A.D. ’’ (Rao Sahib H.Krishna Sastri B.A, S. I. I. Vol II Part V, Introduction Page 2) |