42


சந்திரமல்லியரான     கங்கமாதேவியார்   என்னும்   மூவர்   பெண்
மக்களும்    இருந்தனர்.    முதலாம்    குந்தைவையார்    இவனது
திருத்தமக்கையார் (The venerable elder sister) ஆவர்.

இவன்  காந்தளூர்ச்சாலை  கலம் அறுத்தருளினான். வேங்கை நாடு,
கங்கபாடி,   தடிகைபாடி,   நுளம்பபாடி   குடமலைநாடு,   கொல்லம்,
கலிங்கம்,     ஈழமண்டலம்,     இரட்டபாடி    ஏழரை    இலக்கம்,
பழந்தீவுபன்னீராயிரம்   இவைகளை   வென்றான்.  மேலைச்சளுக்கிய
அரசனாகிய  சத்தியாசிரயனைத்  தோற்றோடச் செய்தான். உறையூரில்
போர்  நிகழ்த்தினான். இவ்வெற்றிகளுக்குக்  காரணம்   இவன்  நல்ல
படைகளை   வைத்திருந்ததோடு   அப்படைகளுக்கு   ஊக்கத்தையும்
ஆக்கத்தையும்  அளித்தமையே  யாகும். இவனது  படைகளைப்பற்றிப்
பின்வருமாறு கல்வெட்டுக்களினால் அறியக்கிடக்கின்றன. அவை,
  

பெருந்தனத்து ஆனையாட்கள்.
பண்டித சோழத்தெரிந்த வில்லிகள்
உத்தமசோழத்தெரிந்த அந்தளகத்தாளர்;
நிகரிலிசோழத்தெரிந்த உடனிலை குதிரைச் சேவகர்.

5. 
 

மும்மடி சோழத் தெரிந்த ஆனைப்பாகர்
வீரசோழ அணுக்கர்.
பராந்தக கொங்கவாளார்
மும்மடி சோழத்தெரிந்த பரிவாரத்தார்.
கேரளாந்தகத் தெரிந்த பரிவாரத்தார்.

10. 
 

மூலப்பரிவார விட்டேறு ஆகிய ஜனனாத தெரிந்த
பரிவாரத்தார்.
சிறுதனத்து வடுகக் காலவர்.
வலங்கைப் பெரும்படைகளிலார்
பெருந்தனத்து வலங்கை வேளைக்காரப்படைகள்

15 
 

சிறுதனத்து வலங்கை வேளைக்காரப் படைகள்
அழகிய சோழத்தெரிந்த வலங்கை வேளைக்காரர்
அரிதுர்க்க லங்கணத்தெரிந்த வலங்கை வேளைக்காரர்
சண்டபராக்கிரமத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்
இளையராஜராஜ தெரிந்த வலங்கை வேளைக்காரர்

20 
 

க்ஷத்திரிய சிகாமணி தெரிந்த வலங்கை வேளைக்காரர்
முர்த்த விக்கிரமாபரணத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்