43



 

நித்தவிநோத தெரிந்த வலங்கை வேளைக்காரர்
ராஜகந்திருவ தெரிந்த வலங்கை வேளைக்காரர்

25 
 

ராஜவிநோத தெரிந்த வலங்கை வேளைக்காரர்,
ரணமுகபீம தெரிந்த வலங்கை வேளைக்காரர்
விக்கிரமாபரணத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்,
கேரளாந்தக வாசல் திருமெய்க்காப்பார்
அணுக்கவாசல் திருமெய்க்காப்பார்

30

பரிவார மெய்க் காப்பார்கள்

31  

பலவகைப்  பெரும்  படைகளிலார் என்பன. (S.I.I.Vol 
II.Part V - Introduction Page 9.)
   

இப்படை  வகைகளில் (Regiments) வந்துள்ள  பண்டித  சோழன்,
உத்தமசோழன்,    நிகரிலிசோழன்,   மும்மடிசோழன்,    வீரசோழன்,
கேரளாந்தகன்,   ஜனநாதன்,   சிங்களாந்தகன்,   அழகிய   சோழன்,
அழகியதுர்க்கலங்கணன்,   சண்டப்பராக்கிரமன்,   க்ஷத்திரியசிகாமணி,
மூர்த்தவிக்கிரமாபரணன்,      நித்தவிநோதன்,      இராசகந்தர்வன்,
இராசராசன்,     இராசவிநோதன்,     இரணமுகபீமவிக்கிரமாபரணன்
என்பவைகள் - இராசராசன், இவன் மகன் இராசேந்திரன்  இவர்களின்
விருதுப்பெயர்கள். இப்பெயர்கள் படைகளுக்கு வைக்கப்பட்டிருந்தன.

‘‘பரிவார     மெய்க்காப்பாளர்’’,  உடனிலைக்   குதிரைச்சேவகர்’’
என்பனவற்றால் இவன் தற்காப்பின்பொருட்டு  மெய்க் காப்பாளரையும்,
குதிரைப்படை  ஒன்றையும்  வைத்திருந்தான்  எனப் பெறப்படுகின்றது.
உத்தமசோழத்தெரிந்த    அந்தளகத்தாளர்,    மூலப்பரிவாரவிட்டேறு,
பண்டித   சோழத்தெரிந்த   வில்லிகள்,  என்பனவற்றால்  இவன்பால்
மெய்யுறைபூண்டவீரர், விற்படையினர், வேற்படையினரும்   இருந்தனர்.
அந்தளகம்  என்பது  (Coat  of mail) மெய்யுறை. விட்டேறு என்பது
வேற்படை.   வேளைக்காரப்   படை   என்பது  உற்றவிடத்து  உயிர்
வழங்கும்  பெற்றியினர்.  சிறுதனம், பெருந்தனம் என்பன   அரசனால்
கொடுக்கப்பட்ட  பட்டம்  (Titles).  முதலாம்  இராசராசசோழன், தன்
மகன்  இராசேந்திரனிடம்  ஒன்பது  நூறாயிரம்  பேர்கள்   அடங்கிய
பெருஞ்சேனையை,   இராட்டிரகூட  அரசனாகிய   சத்தியாசிரயன்மீது
அனுப்பினான்  என்று  ஹோட்டூர்க்  கல்வெட்டு (Hottur Inscription)
உணர்த்துவதால்  இராசராசனிடம்  அளவிறந்த  தரைப்படை  இருந்த
செய்தி   புலப்படுகின்றது.   இத்தரைப்படையன்றி   கடற்படையையும்
வைத்திருந்தான்.    சிங்களர்    ஈழமண்டலம்,    முன்னீர்ப்பழந்தீவு
பன்னீராயிரம் இவைகளை