44


வென்றது  கடற்படையின்  உதவியாலேயாகும். இப்படையெடுப்புக்களில் கொண்டுவந்த  பொருள்கள்  அனைத்தையும்  இராசராசேச்சரத்துக்கும், படையினர்களுக்குமே கொடுத்தான்.

முதலாம்   இராசராசன்  காலத்திற்கு  முன்னர்,  ஆற்றல்  சான்ற
பல்லவர்,  பாண்டியர்,  சோழர்  இவர்கள் தென்னாட்டை ஆண்டனர்.
இவர்களில்  எவர்களேனும், கல்வெட்டில் தங்கள் படைகளைப் பற்றிக்
குறித்தாரல்லர். முதலாம் இராசராசசோழன் தான்,இப்படைகளைப்பற்றிக் கல்லில் பொறித்து வைத்துள்ளான்.

எல்லாப் படைகளுக்கும் தலைமையாயுள்ளவன் மகாதண்ட நாயகன்
எனவும்,    ஒவ்வொரு    படைக்கும்    தலைமையாக   உள்ளவன்
தண்டநாயகன், சேனாபதி எனவும் வழங்கப்பட்டனர்.

‘‘வங்கியம் ஒன்றுக்கு நிகரிலிசோழத் தெரிந்த உடநிலைக் குதிரைச்
சேவகரில்  நின்றும் புகுந்த தஞ்சை கணவதிக்குப் பங்கு ஒன்றரையும்’’
(S. I. I. Vol. II Part III Page 274. N0.417).

(முத்திரைச்   சங்கு    ஒன்றூத)     மும்மடிசோழத்    தெரிந்த
ஆனைப்பாகரில் சூற்றிநாதனுக்குப் பங்கு ஒன்றும், (Ibid No. 436)

பக்கவாத்தியர்  ழகிய  சோழத்   தெரிந்த   வலங்கை  வேளைக்
காரரில்   ஐயாறன்   அந்தரிக்குப்  பங்கு  முக்காலும்  (Ibid No.438)
என்பன    முதலியவற்றால்  இப்படையினரில்  சிலர் வங்கியம், பக்க
வாத்தியம்     இவை    வாசிக்கவும்    முத்திரைச்சங்கு    ஊதவும்
இராசராசேச்சரத்துக்குச்  சென்று  ஊதியம்  பெற்றிருந்தனர்  என்றும்
அறியக்கிடக்கின்றன.

நாடாட்சியை நன்கு செலுத்தும் பொருட்டு சோழ மண்டலத்தை,

அருமொழிதேவ வளநாடு
க்ஷத்திரிய சிகாமணி வளநாடு
தென்கரை கேரளாந்தக வளநாடு
இராசேந்திர சிங்க வளநாடு
இராசாசரிய வளநாடு
நித்தவிநோத வளநாடு
உய்யக்கொண்டான் வளநாடு