களுள் சுந்தரேஸ்வரர்கோயில் கல்வெட்டில் இறைவர் பரசுராமேஸ்வரம் உடையார் என்று கூறப்படுகின்றனர். (A.R.E. 1932 Number 104). இந்தப் பரசுராமேஸ்வரம் உடையார் கோயில் நிலைபெற்றுள்ள இடம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டுத் தைலோக்கி ஆகிய விருதராச பயங்கரச் சதுர்வேதிமங்கலத்து ராஜதிவாகரநல்லூர் ஆகும். (A.R.E. 1932 No. 102) இந்தப் பரசுராமேஸ்வரம் உடையாரின் அம்மன் கோயில், கணித சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது. இந்த அம்மன்கோயிலின் பூசனையைக் கோசலை திருபுவனசுந்தரத் தட்சிணாமூர்த்திப் பட்டனுக்கு அரசன் (கோனேரின்மை கொண்டான்) உரிமை செய்ததை ஒரு கல்வெட்டு உணர்த்துகிறது. (A.R.E. 1932 No.104). மற்றொரு கோயிலாகிய கயிலாசநாதர்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் பெயர் கயிலாசமுடையார், என்று அக்கோயிலிலுள்ள திரிபுவனச் சக்கரவர்த்தி இராசராசதேவரின் எட்டாம் ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. (A.R.E. 1932 No.109.) இக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டில் ‘‘இராஜேந்திரசோழதேவர் கங்கைகொண்டு எழுந்தருளுகின்ற இடத்து திருவடிதொழுது’’ - என்று பொறிக்கப்பட்டிருக்கின்றது. முதலாம் இராசேந்திரசோழன் (கி.பி.1012-1044) கங்கை நீரைக் கொண்டுவருகையில் முதலில் இங்கு வந்து இக்கோயில் இறைவனை வணங்கி, அதன் பிறகு கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சென்றான் என்று கொள்ளக் கிடப்பதால், இக்கோயில் சிறப்புடையதாதல் வேண்டும். அச்சிறப்புத்தான் என்னைஎனின், அது கருவூர்த் தேவரால் பாடப்பட்டதாதல் வேண்டும். கருவூர்த் தேவர் முதலாம் இராசராசசோழன், முதலாம் இராசேந்திரசோழன் ஆகிய இருவர்களின் காலங்களில் இருந்தவர். இறைவர் பெயர் கல்வெட்டில் கயிலாசமுடையார் என்று இருக்கின்றது. திரைலோக்கியசுந்தரம் என்று குறிப்பிடப்படவில்லை_இலிங்கத்திருமேனி அழகாய் (சுந்தரமாய்) இருப்பதால் கருவூர்த்தேவர் திரைலோக்கிய சுந்தரன் என்று பாடினார்போலும். இத்திரைலோக்யசுந்தரத் திருவிசைப்பாவின் ஒவ்வொரு பாடலிலும் ‘ கோடைத் திரைலோக்கிய சுந்தரனே’’ என்றிருப்பதால், கோடைக்கு அருகில் இத்திரைலோக்கி இருப்பது பற்றியாகும். கோட்டூர் என்பது கோடை என்று மருவி வழங்கப்படும். இத்திரைலோக்கிக்குத் தெற்கில் கோட்டூர் என்று ஒரு ஊர் இருக்கின்றது. அது |