கல்வெட்டு வரலாறு:1 இப்பன்னத்தெருக் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் மூன்றாங்குலோத்துங்க சோழனுடைய 18-ஆம் இராச்சிய ஆண்டிலும், 25-ஆம் இராச்சிய ஆண்டிலும் பொறிக்கப்பட்டவை. இவைகளுள் முன்னது இக்குலோத்துங்க சோழனை, மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின எனவும்: பின்னது மதுரையும், ஈழமும், கருவூரும், பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின எனவும் குறிப்பிடுகின்றன. இக்கல்வெட்டுக்களில் இறைவரின் திருப்பெயர் ‘பன்னகாபரணேஸ்வரர்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்களுள் முதல் கல்வெட்டு செல்கல் என்னும் ஊரில் இருந்த வீமநாயக்கன் என்னும் பெயருள்ள எண்ணெய் வியாபாரியிடமிருந்து ஒரு நுந்தா விளக்கு எரிப்பதற்கு 400 காசையும், இரண்டாம் கல்வெட்டு குலோத்துங்கசோழ வளநாட்டுத் திருவாஞ்சியம் என்னும் ஊரில் இருந்த கங்கை கொண்ட வேளார் ஆகிய திருவேங்கட தேவனிடமிருந்து விளக்கு எரிப்பதற்கு 1300 காசையும்: இக்கோயிலுக்குரிய சிவப்பிராமணர் பெற்றனர் என்பனவற்றை உணர்த்துகின்றன. இக்கல்வெட்டுக்களில் ஊரின்பெயர் முகத்தலை என்று குறிக்கப்படவில்லை. பழைய கல்வெட்டுக்களில் ஊரின் பெயரையே இறைவனுக்கு வைக்கப்படுவதுண்டு. 1926 ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிக்கை இத்துறையில் வல்லவர்களால் எழுதப்பட்டது. முகத்தலை என்பது ஊரின் பெயராய் இருப்பின் அதை, அந்த அறிக்கையில் கல்வெட்டுத் துறையினர் குறித்தே இருப்பர். அங்ஙனம் குறிக்காமையால் பன்னத்தெரு என்னும் ஊரே முகத்தலை என்பது ஆய்தற்குரியது. விடைக்கழி தஞ்சாவூர் ஜில்லாவில் மாயூரம் சந்திப்பிலிருந்து பொறையாறு செல்லும் இரயில் பாதையில் உள்ள தில்லையாடி ரயில் நிலையத்தில் இறங்கி மேற்கே இரண்டு மைல் தூரம் சென்றால் இவ்வூரையடையலாம். திருக்கோயிலில் முருகப்பெருமான் திருமேனி முதலில் இருக்கிறது. அவர் திருமேனிக்குச் சற்று வட
1. See the Annual reports on South Indian Epigraphy for the year 1926. Nos. 163-164. |