59


சேந்தனார்,     திருவீழிமிழலை, திருவாவடுதுறை,   திருவிடைக்கழி
ஆகிய  முத்தலங்களுக்கும்,  மூன்று திருவிசைப்பாப்   பதிகங்களையும்,
தில்லையம்பதிக்குத்   திருப்பல்லாண்டு   என்ற    திருப்பதிகத்தையும்
அருளிச் செய்துள்ளார்.

காலம்:-

கண்டராதித்த   சோழ மன்னரின் (கி.பி.947-957) ஆட்சிக் காலத்தில்
தோன்றிய  கல்வெட்டில்,  ‘கலி  விசயன் தருணேந்து சேகரன்’   என்ற
தொடர்கள்  காணப்படுகின்றன.  ‘தருணேந்து சேகரன்’  என்ற  தொடர்
சேந்தனார்  பாடிய  இரண்டாம் பதிகத்து மூன்றாம் பாடலில்  உள்ளது.
ஆகவே    சேந்தனார்    கண்டராதித்த    சோழரின்    காலத்துக்கு
முற்பட்டவராதல்   வேண்டும்.   பட்டினத்து   அடிகளின்    கணக்கர்
என்பதால் இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியும்,  பத்தாம்
நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும் எனலாம்.

3. கருவூர்த் தேவர்

கருவூர்த்தேவர்  கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர்.அவர்
பிறந்த ஊரோடு இணைத்து அவரது திருப்பெயர்  கருவூர்த்தேவர் என
வழங்கப்படுகிறது.     அவரது     இயற்பெயர்        இன்னதென்று
அறியமுடியவில்லை.   இவர்   அந்தணர்     குலத்தில் தோன்றியவர்.
வேதாகமக்கலைகள்  பலவற்றையும்  கற்றுத் தெளிந்தவர்.  மிகப்பெரிய
யோகசித்தர்.  போக  முனிவரிடம்  உபதேசம்  பெற்று  ஞானநூல்கள்
பலவற்றையும்   ஆராய்ந்து   சிவயோகமுதிர்வு   பெற்று  காயகல்பம்
உண்டவர்.   சித்திகள்  பலவும்  கைவரப்பெற்றவர்.  உலக  வாழ்வில்
புளியம்பழமும்   ஓடும்போல  ஓட்டியும்  ஓட்டாமலும்   விளங்கியவர்.
இவர்  செய்த  அற்புதங்கள்  பலவாகும். இவரது செயல்கள்  இவரைப்
பித்தர் என்று கருதும்படிச் செய்தன.

கருவூர்த்தேவர்  கொங்குநாடு,  வடநாடு,  தொண்டைநாடு, நடுநாடு
முதலிய    இடங்களில்   உள்ள  தலங்களைத்  தரிசித்துக்  கொண்டு,
தென்பாண்டிநாட்டுத்   திருப்புடைமருதூர்   சென்று,    இறைவனிடம்
திருவடிதீட்சை     பெற்றார்.     இவர்      திருநெல்வேலியடைந்து
நெல்லையப்பர்  சந்நிதியில்  நின்று   ‘நெல்லையப்பா’   என்றழைக்க,
அப்பொழுது     பெருமான்     இவரது    பெருமையை    பலரும்
அறியும்பொருட்டு  ‘‘இங்குக்  கடவுள் இல்லைபோலும்’’ என்று சினந்து
கூற அவ்வாலயம் பாழாகியது என்றும், பின்னர்