சான்றோர் மரபு: பெரியோர் வாக்குகள் மேம்போக்காகப் பார்த்தற்குரியன அல்ல;அவை ஆழ்ந்து ஆழ்ந்து பார்த்துச் செல்லற்கு உரியவை; அப்போதுதான் அவர்கள் பெற்ற அநுபவம் நமக்குப் புலனாம். அந்த அநுபவத்தின் எல்லையினை அணுகாதவரையில் நம் ‘பாடல் நெறி’ பண்பட்டதெனக் கூறவியலாது. இக் கவிதையின் முதல் இருவரிகள், ‘புலன் ஐந்தும் பொறி கலங்கி’ எனத்தொடங்கும் ஆளுடைய பிள்ளையார் அருட்பாடலை நினைவு கூர்வித்தல் அறிந்து இன்புறத்தக்கது ஆகும்1. அதனுடன் அருளாளர் ‘ஒருநெறி யுணர்வை’யும் நம் உள்ளத்தே தோற்றுவிப்பதாகும். ‘பிறவிப் பௌவம்’ என்ற உருவகம், ‘தனியனேன் பெரும் பிறவிப் பௌவத்து’2 என்றற் றொடக்கத்துத் திருவாசகப் பகுதிகளை நினைப்பிப்பது ஆகும். அவ்வாறே, ‘ஐவரும் பகையே’ என்ற குறிப்பு. அப்பரடிகள் ஐம்புலன்களான் வரும் அல்லல்களை விரித்துரைக்கும் அனைத்துப் பகுதிகளையும் நினைப்பிப்பது எனலாம்.3 ‘திருவளர் திருச்சிற்றம்பலம்’ என்ற தொடர், ‘சென்றடையாத திரு ‘முதலிய’ திருமுறை வாக்குக்களைக் கருத்திற் கொணர்விப்பதாகும். பிழைத்தவை பொறுத்தல்: திருக்களந்தை யாதித்தேச்சரம் உடைய பிரானை வழிபடும் மற்றொரு பாடற் பகுதியும் இங்கு நினைத்தற் குரியது.4 கருவூர்த்தேவர் இதனுள், இறைவன் தொண்டர்க்கு எளியவன் என்பதனை விளக்குகின்றார். ஆனால் அத்தொண்டர் பழைமை உடையராதல் வேண்டும் என்பது அவ்வருளாளர் குறிப்பு. மாறுபட்டு நிற்பவர்க்கு இறைவன் அரியவனே ஆவன். எங்கே எளிமையும். அன்பும் கனிந்த இதயம் உண்டோ. அங்கே அவன் தோன்றுவான். ‘மற்றவர் அறியா மாணிக்க மலை’ என்பதும் உணரத்தக்கது5. ஆதலின் ‘மிண்டர்க்கு அரியவன்’ ஆகவும் அவன் உள்ளான்6. பிழை பொறுத்தருளும் பெருங்கருணையே
1. திருஞானசம்பந்தர் தேவாரம்-திருவையாறு. 2 திருவாசகம் 3. அப்பர் தேவாரம் 4. திருஞானசம்பந்தர் தேவாரம் 5. திருவிசைப்பா -94 6. திருவிசைப்பா -47 |