உழையராய் வந்தென் குடிமுழுதாளுங் குழகரே ஒழுகுநீர்க் கங்கை அழகரே யாகில் அவரிடங் களந்தை அணிதிக ழாதித்தேச்சரமே.’’ ஏனைய பாடல்களில் இறைநிலை: இவ்வாறே கருவூர்த்தேவர் பாடும் கவிதைகள் அனைத்தும் அருஞ் சிறப்புடையவை. திருமுகத்தலைப்பதிகம் மிக அரும்பெருஞ் சிறப்புடையது. ‘புவனநாயகனே’ எனவரும் பாடல், உணர்ந்துணர்ந் தோதத்தகுவதாகும்.1 பாவியேன் ஆவியுள் புகுந்தது என்ன காரணம்?, என வினாவும் எழிலும்,2 என் ‘வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே’ என இறுமாக்கும் பொற்பும்3 உணரத்தக்கவை. திரைலோக்கிய சுந்தரத்துப் பதிகப்பாடல்கள் அகப்பொருள் நெறியில் பரம்பொருளை நெஞ்சிற்பதிப்பவை.4 அன்பொடு தன்னை அஞ்செழுத்தினால் வழிபடுவோர்க்கு எல்லாப் பேறும் தரும் இறைவன் அற்புதத் தெய்வம் ஆவன்’ என்றும்5 ‘அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட, அங்ஙனே பெரிய நீ, சிறிய என்னை ஆள்விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்’ என்றும்6 ‘கருதுவோர் கருதும் உருவமாம்’ என்றும்7 ‘பெண்கள்மேல் வைக்கும் காதலில் நூறாயிரத்துள் ஒரு கூறு உன்கண் வைத்தாற்போதும், என்றும்8 மங்கையோடிருந்தே யோகுசெய்வான்’ என்றும்9 வரும் கங்கைகொண்டசோழேச்சரப்பதிகக் கருத்துக்கள் மறக்கவியலா மாண்பு உடையவை. ‘பன்னெடுங்காலம் பணி செய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித
1. திருவிசைப்பா 112 2. திருவிசைப்பா 114 3. திருவிசைப்பா 117 4. திருவிசைப்பா 122 to 132 5. திருவிசைப்பா 135 6. திருவிசைப்பா 133 7. திருவிசைப்பா 137 8. திருவிசைப்பா 140 9. திருவிசைப்பா 143 “மங்கையைக் கெழுவின யோகினர்’’ -அப்பர். 98 |