திருக்க, என்னெடுங்கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்’ எனத் தஞ்சை இராசராசேச்சரத்திறைவனைப் போற்றுவர்.1 திருவிடை மருதூர்ப்பிரான் ‘மன்னிடை நுணுகி நுணுகி உள்கலந்தோன்2 ‘மழலையாழ்சிலம்ப வந்து அகம்புகுந்தோன்’3 ‘கண்ணிற் கண்மணியனையான்’4 என்று போற்றுவர் தேவர். போற்றிப்பாடல்: திருச்சாட்டியக்குடியில் தேவர் இறைவனைப் போற்றும் திருப்பாடல் நம் அன்றாடவழிபாட்டில் கூறி அநுபவம் பெறத் துணைநிற்பது ஆகும்; அத்திருப்பாடல் பின்வருவது:5 ‘‘செங்கணா போற்றி! திசைமுகா போற்றி! சிவபுர நகருள் வீற்றிருந்த அங்கணா போற்றி! அமரனே போற்றி! அமரர்கள் தலைவனே போற்றி! தங்கணான் மறைநூல் சகலமும் கற்றோர் சாட்டியக் குடியிருந் தருளும் எங்கணாயகனே போற்றி! ஏழிருக்கை இறைவனே! போற்றியே! போற்றி!’’ பண்ணிசைக் குறிப்பு: புறநீர்மை, பஞ்சமம். காந்தாரம் ஆகிய மூன்று தமிழ்ப் பண்களில் இவ்விசைப் பாடல்கள் நூற்றிரண்டும் அமைந்துள்ளன. இவற்றுள், ‘தீந்தமிழ் மாலை’6 ‘தமிழ் மாலை’7 ‘மணி நெடு மாலை’8 ‘அமுதுறழ் தீந்தமிழ் மாலை’9 ‘சொல்மாலை’10 ‘பாவணத் தமிழ்கள்’11 தருங்கரும் பனைய தீந்தமிழ
1. திருவிசைப்பா 169 2. திருவிசைப்பா 175 3. திருவிசைப்பா 179 4. திருவிசைப்பா 181 5. திருவிசைப்பா 159 6. திருவிசைப்பா 90 7. திருவிசைப்பா 100,132 8. திருவிசைப்பா 111 9. திருவிசைப்பா 121 10. திருவிசைப்பா 143,161 11. திருவிசைப்பா 151 |