மாலை’1 என்ற தொடர்களால் இவற்றை ஆசிரியரே பாராட்டியுள்ளமையும் இவ்விடத்து அறிதற்குரியதாகும். ‘‘காந்தாரப் பண்ணில்’’ திரைலோக்கிய சுந்தரப்பதிகம், ஆசிரியராற் பாடப்பட்டிருக்க வேண்டும் என்ற குறிப்பு அகச்சான்று ஒன்றாற்புலன் ஆகின்றது; மற்றையவை இவ்விரு பண்களிற்றான் பாடப்பட்டன என்று அறிய ஆசிரியர் வாக்கில் அகச்சான்று இல்லை. முன்னையதற்குப் பின்வரும் வரிகள் சான்றாகும்.2 ‘பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம் சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே’ மற்றோர் மரபு: இனி,‘கருவூர்’3 ‘கருவூரன்’4 ‘பித்தனேன்’5 ‘கருவூரனேன்’6 என்ற சொற்களால், இவ்வாசிரியர் தம்மைப் பதிகந்தோறும் வரும் திருக்கடைக்காப்புச் செய்யுட்களில் கூறுதல் திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயச்சான்றோரது பாடல் நெறியை இவ்வாசிரியர் பின்பற்றி நிற்பவர் எனற்குத் தக்க சான்றாக அமையும் எனலாம். தம்மை ஆரணம் பிதற்றுபவராகவும்7 மறை தெரிபவராகவும்8 தேவர் கூறுதல், இவர் வேதநூற்பயிற்சி உடையவர் என்பதனையோ, அன்றி மறையவர் குலம் சார்ந்தவர் என்பதனையோ விளக்குவது என்று கூறலாம். முதலாம் இராசராச சோழர் காலத்து வாழ்ந்த இவ்வருட்பெருங் கவிஞர் திருப்பாட்டுக்கள் அக்கால நிலையை இனிது விளக்குவனவாகவும் அமைந்திருத்தல் வரலாற்றாராய்ச்சியாளர்க்கு இறும்பூது பயப்பது ஒன்றாகும். யாப்புக் குறிப்பு: பதினொரு பாடல்கள் கொச்சகக் கலிப்பா அமைப்பிலும்9 ஏனையவை எழுசீர் விருத்தங்களாகவும் அமைந்துள்ளன. இவ்
1. திருவிசைப்பா 182 2. திருவிசைப்பா 132 3. திருவிசைப்பா 90,100,121,143 4. திருவிசைப்பா 132 5. திருவிசைப்பா 111 6. திருவிசைப்பா 151 7. திருவிசைப்பா 111,100,132 8. திருவிசைப்பா 151 9. திருவிசைப்பா 122 to 132 |