83


‘‘மறைகளும் அமரர்கூட்டமு மாட்டாது
   அயன் திருமாலொடு மயங்கி
முறை முறை முறையிட்டோர் வரியாயை.’’
                               -திருமாளிகைத் தேவர்.

‘‘பண்டலரயன் மாற்கரிது மாயடியார்க்
கெளிய தோர் பவளமால் வரையை.’’
                              -சேந்தனார்.

‘‘கேழலும் புள்ளுமாகி நின்றிருவர்
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்.’’
                              -கருவூர்த் தேவர்.

‘‘பரவிக்கிடந்து அயனும்மாலும் பணிந்தேத்த.’’
                          -பூந்துருத்திநம்பிகாடநம்பி.

‘‘வாளா மாலயன் வீழ்ந்து காண்பரிய மாண்பு.’’
                                 -வேணாட்டிகள்.

‘‘வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்
   மலரவன் முடிதேடி
யெய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார்
   எழில் மறையவற் றாலே.’’
                              -திருவாலியமுதனார்.

‘‘அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
   இருவரு மறிவுடையாரின் மிக்கா
ரேத்து கின்றா ரின்ன மெங்கள் கூத்தை’’
                                 -புருடோத்தமநம்பி.

‘‘புரந்தரன் மாலயன் பூசலிட் டோல மிட்டு
   இன்னம் புகலரிதா
யிரந்திரந் தழைப்ப என்னுயிராண்ட கோ.’’
                               -சேந்தனார் பல்லாண்டு.

ஆணவம்     அடையாத   வெற்றியை   இவ்வடியார்கள்    அன்பால்
அடைந்து இப்படிப் பெருமை பொங்கப் பேசுகிறார்கள்.

சிந்திப்பரிய தெய்வப் பதி:

அளக்கலாகா     அருளுடையாளன்  எழுந்தருளிய  திருத்தலங்கள்
பலவானாலும்  சிந்திப்பரிய  தெய்வப்பதி  என்று    திருவாலியமுதனார்
திருவாக்கால் சிறப்பிக்கப்படும் பதி சபாபதி ஆடும்