என்று அச்சம் நிறைந்த காட்சியைப் பதினொன்றாம் திருமுறை காட்டும். கிட்கிந்தா காண்டத்தில் பம்பைக் கரையில் கம்பர் காட்டுகிறார், கொக்கின் நிழல்கண்டு நடுங்கும் மீன் கூட்டத்தை. ‘‘ஏலும் நீர் நிழல் இடையிடை எறித்தலின் படிகம் போலும் வார்புனல் புகுந்துளவாம் எனப் பொல்கி ஆலும் மீன் கணம் அஞ்சின அலமர வஞ்சிக் கூல மா மரத்து இருஞ்சிறை புலர்த்துவ குண்டம்’’ -பம்பைப்படலம்-19 படிகம் போன்ற நீரில்-கரையில் வஞ்சிமரத்திலிருந்து இறகுகளைப் புலர்த்திக் கொண்டிருக்கிற கொக்குகளின் நிழல் தெரிய அவற்றை-உண்மையென்று நம்பி அஞ்சிப் பதுங்கின மீன்கள். எப்படி இருக்கிறது இயற்கையின் பரிசு. சேயோன் செய்த மாயை: திருவிடைக்கழி முருகனைப் பாடும் சேந்தனார் தாயாகவும் தலைவியாகவும் இருந்து பாடுங் கூற்றுக்கள் அந்தாதியாக அமைந்துள்ளது. ‘‘சாயலும் நாணுமவர் கொண்டார் கைம்மாறா தோயும் பசலையுந் தந்து’’ என்றொருத்தி புலம்புவாள். இந்தத் தலைவியும் செவ்வேளாம் இளங்குமரன் மால் தந்து சங்கம் வௌவினான்- என்று குறை கூறுகிறாள். தாய்-தன் மகள் நிலைகண்டு வேதனையும், வெட்கமும் கொண்டாள். இவள் இன்னும் சிறுமியாகவே இருக்கிறாளே! என்ன செய்வது! வேல் பிடித்த அவ்வீரனை-கோனமர் கூத்தனின் குலவிளங்களிறாக-மாமயிலூரும் சுப்பிரமணியனாக-கங்கைதன் சிறுவனாக-சபாபதி பின்னிளங் கிளையாகக் கண்டாளே தவிர குவளை |