பக்கம் எண் :

105பொன்வண்ணத் தந்தாதி

188.கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தின் நீறும்ஐ வாய்அரவும்
முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப் போதும் வருகின்றவே.


பொருட்டு இவள் தனது அழகிய நிறம் கெட நின்ற வருந்துவது என்ன அறிவுடைமை!

குறிப்புரை: இது செவிலிதன் இரங்கற் கூற்று. சிவ பக்தர்களது நிலையைக் கண்டு பிறர் அறியாமையால் இரங்கிக் கூறும் கூற்றாதல் இதன் உள்ளுறைப் பொருள். புவனி - புவனம்; நிலம். சுடர் - ஞாயிறும், திங்களும். நயனம் - கண். பவனம் - காற்று உயிர்ப்பு - மூச்சு. ஓதம் - அலை; அது கடலுக்கு ஆகுபெயர். உடுக்கை - உடை. "வான்" என்றது அதன் முகட்டினை; அஃது "உயர்" என்றதனானும் விளங்கும். விசும்பு - வானம். உடம்பு - உடல்; கழுத்திற்குக் கீழும், அரைக்கு மேலும் கை, தோள்கள் அல்லாத பகுதி; மார்பும், வயிறும். வாயை 'முகம்' என்றல் வடமொழி வழக்கு. கீதம் - இசை; அஃது அதனையுடைய பாட்டைக் குறித்தது. போதம் - அறிவு. இகழ்வது போலச் சிவபெருமானது உலக உருவத்தை (விசுவ ரூபத்தை)ப் புகழ்ந்தவாறு.

மாநிலம் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத், திசைகை யாகப்
பசுஞ்சுடர் மதியமொடு சுடர்கண் ணாக,
இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப,
தீதற விளங்கிய திகிரி யோனே.

என்னும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளை இதனுடன் ஒப்பு நோக்குக. இதனுள் "திகிரி" என்பதைப் பொதுப்பட ஆஞ்ஞா சக்கரமாகக் கொள்வுழி இது பரம்பொருளின் தடத்த லக்கணத்தை விளக்கியதாதல் அறிக. சேவடி முதலியவற்றை வேறு வேறு பொருளாகக் கூறியவர்க்குச் சக்கரத்தையும் வேறு பொருளாக உடம்பொடு புணர்த்துக் கூறலே கருத்தாதல் அறிக.

188. பொழிப்புரை: கொடிச் சீலையின்மேல் எழுதப்பட்டுள்ள இடபமும், கோவணத்துடன் கூடிய கீளும், முடியின்மேல் ஒப்பற்ற ஒரு கொக்கின் இறகும், திங்களும், நறுமணத்தோடு மலர்ந்த கொன்றை மலர்மாலையும், மார்பில் பூசப்பட்டுள்ள திருநீறும், அங்குத் தவழ்ந்து சென்று முடிக்கு மேலே விரிக்கின்ற படங்களையுடைய ஐந்தலை நாகமும், திருவடியில் கட்டப்பட்டுள்ள கழல்களும், தோள்மேல் சார்த்தி யுள்ள இலைவடிவான, கூரிய