பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை106

189.வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன்;பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே.

21


190.

வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்
சோதியென் பால்கொள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான்
நீதியென் றான்;செல்வம் ஆவதென் றேன்;மேல் நினைப்பு;வண்டேர்
ஓதி;நின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே.

22



முத்தலை வேலும் ஆகிய இவை எப்பொழுதும் என் கண்ணில் தோன்றிக் கொண்டே யிருக்கின்றன.

குறிப்புரை: 'இமைப் பொழுதும் நெஞ்சில் நீங்காது நிற்கின்ற சிவனது திருவுருவம் கண்களிலும் தெரிகின்றன' என்றபடி செய்யுளுக்கு ஏற்ற முறை பிறழ வைக்கப்பட்டவை முறையானே வைத்து உரைக்கப்பட்டன. கொக்குருவில் வந்த 'குரண்டன்' என்னும் அசுரன் மிக்க வலியுடையன் என்பதைக் குறிக்க "ஓர் கொக்கு" என்றார். அவனை அழித்து எடுத்த சிறகை அதன் அடையாளமாகச் சிவபெருமான் தனது முடிமேற் சூடியுள்ளான்.

189. பொழிப்புரை: நெருப்புப்போலும் நஞ்சினை வெளி விடுகின்ற பாம்பைக் கண்டு அஞ்சுதலை ஒழித்து வெள்ளிய திங்களைச் சிவந்த சடை முடியின் மேல் வைத்துள்ள, வேதப் பொருளானவனே, நாளுக்கு நாள் மிகுந்து வருகின்ற மூப்பும், கொடிய நோயும் செய்கின்ற போருக்கு அடியேன் சிறிதும் ஆற்ற மாட்டாதவனாய் உள்ளேன். அதனால், திருநீற்றைப் பூசிக் கொண்டு உன் அருகில் வந்து நிற்கும்படி அடியேனுக்கு அருள்புரி.

குறிப்புரை: கண்டாய், முன்னிலை யசை, கூற்றுவன் வருகைக்கு அறிகுறியாவனவற்றை, "கூற்றம்" என்றே உபசரித்துக் கூறினார். 'விரைந்து வீடருளுக' என்பது கருத்து. வைகல் - நாள். வெரு - வெருவுதல்; முதனிலைத் தொழிற்பெயர். "வெண்மதி செஞ்சடை" சொல் முரண் தொடை.

190. பொழிப்புரை: வேதப் பொருளாகிய சிவபெருமானது பாதங்களை யான் பாவித்தேன்; பணிந்து, 'ஞானம்' என்னும் ஒளி