| 191. | ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன்; அறுபகை ஒங்கிற்றுள்ளம் இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும் பழித்தேன் பழியே விளைக்கும்பஞ் சேந்தியக் குஞ்சரமும் தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே. |
| 192. | தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்; தீங்கவி பாடலுற்றேன்; ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்உரைத் தாருரைத்த |
என்னிடத்தில் வந்து பொருந்தும்படி இசைந்து நின்றேன். அங்ஙனம் நின்ற எனக்கு, 'இன்று முதல் இந்த முறைமையே முறைமே' என அவன் அருளிச் செய்தான். ஆயினும், இதற்கு மேலும் எனக்கு ஒரு கருத்து உளது. அஃதாவது, 'உமையையும் உன்னையும் போன்ற வகையில் இருவராய் நில்லாது ஒருவராதலே பெருஞ் செல்வம் என்பதாம் - என்றேன். குறிப்புரை: 'அச்செல்வம் வாய்க்குங்கொல்' என்பது குறிப்பெச்சம். "என்றான்" என்பதன்பின், 'மேல் நினைப்பு. வண்டு ஏர் ஓதியையும், நின்னையும்போலும் வகைத்தாய் இருபாலும் ஒழித்த அதுவே செல்வம் ஆவது என்றேன்" என இயைக்க. "ஆவது" என்பது, 'ஆவதாகிய நினைப்பு' என்றபடி. எய்தல் - பொருந்துதல். "சிவன் சிவத்தொடு இரண்டறக் கலந்து நிற்பதே ஞானத்தின் பயன்' என்றபடி. 191. பொழிப்பரை: சிவனது திருவடிகளையே பற்றாகச் சேர்ந்தேன். அதனால் யான் இனி வரக்கடவதாகிய பிறவி யாதொன்றும் இல்லாமல் ஒழித்துவிட்டேன். பிறப்பிற்குக் காரணமாகிய அகப்பகை ஆறினையும் மிதித்து மேல் ஏறினேன். எனது உள்ளம் உயர்நிலையை அடைந்தது. உடம்பின் இழிவை உணராது பற்றியிருந்த நிலையைவிட்டு அதன் இழிவை அறிந்து அதனை அருவருத்தேன். ஆகவே, உடம்பை ஓம்புதற் பொருட்டு இனிப் பிறரிடம் சென்று இரத்தலைச் செய்யேன். எனக்கு உரியதாக என்றாலும், பிறராலும் மதிக்கப்பட்ட இந்த இல்லத்தையும் இகழ்ந்து நீங்கினேன். குற்றங்களையே விளைக்கின்ற பஞ்சேந்திரியங்களாகிய யானைகளை அதட்டி அடக்கினேன். ஆகவே, யான் இப்பொழுது மயக்கங்கள் யாவும் நீங்கித் தெளிவடைந்தேனா கியேவிட்டேன். குறிப்புரை: 'இல்லம்' என்பது இல்லாளையும் குறிப்பது. அகப்பகை ஆறு காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், அடக்குதலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. ஏகாரம், தேற்றம். சிவனடி சேர்தலின் பயனை உணர்த்திய வாறு. 192. பொழிப்புரை: சிவபெருமானே, அடியேன் இனிய கவிகளைப் பாட வல்ல தெளிந்த அறிவுடையாரை அடுத்ததும்
|