| 196. | உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாந் திரியும், விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல் திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தம்; செறியச்செய்த கரைவளர் வொத்துள தால்சிர மாலையெம் கண்டனுக்கே. |
நறுமணம் உள்ள கொன்றைத் தாரின் மணம் கமழ்கின்ற உடம்புடையளாயினாள். 'இதையறிந்தால் அயலார் சொல்லும் சொற்கள் எவையாய் இருக்கும்' என்பதையான் அறிகின்றிலேன். குறிப்புரை: 'பேதைப் பருவத்தே இவள் புத்தி யறிந்து சிவனைத் தழுவிவிட்டாள்; இனி, இவள் பிறன் ஒருவனுக்கு உரியளல்லள்' எனப் பலரும் கூறுவார்கள் என்பதாம். இது கருவிலே திருவுடையராய்ச் சாமுசித்தராய்ப் பிறந்து, குழவிப் பருவத்தே சிவனை யடைந்த ஞானசம்பந்தர் போன்றாரது பெருமையைக் குறிப்பால் உணர்த்தியது. முதுக்குறைந் தனளே! முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி; முலையும் வாரா; முதுக்குறைந் தனளே! என்னும் பழம்பாடல் ஒன்றை இதனுடன் ஒப்பு நோக்குக. 'பிறர்க்கு உரியளல்லள்' என்பது, 'கைச்சிறு மறியவன் கழல் அலாற் பேணா கருத்து'1 உடையர் ஆதலையும், 'அயலார்' என்பது பெத்தர்களையும் உள்ளுறையாகக் குறிக்கும். "முடிக்கின்றில" என்பது முடிக்கப் படுகின்றல' என்றபடி நீங்காதிருத்தலை, 'குடிகொண்டிருத்தல்' என்றல் வழக்கு, "குடிக் கொண்ட" என்பதில் ககர ஒற்று விரித்தல் போக மாலையாவது மார்பிற் புரளும் தார் ஆகலானும், "கண்ணிகார் நறுங் கொன்றை, காமர் - வண்ண மார்பில் தாரும் கொன்றை"2 என்ப ஆகலானும், "மெய்க்கொண்ட கொன்றை" என்றது, கொன் றைத் தார் ஆயிற்று. அது மும்மடி ஆகு பெயராய், அத்தாரின் மணத்தைக் குறித்தது. நாறுதல் - கமழ்தல், ஒற்றுமையால் உடம்பும், உயிரும் சினையும், முதலும்போல நிற்றலால், "நாறுகின்றாள்" என்றது, சினைவினை முதல்மேல் நின்றதாம். இப்பாட்டுச் சிவபெருமானோடு களவிற் கலந்த பேதைப் பெண் ஒருத்திக்குச் செவிலியாயினாள் கூற்றாக அருளிச் செய்யப்பட்டது. ஞானிகளது செயலை உலகர் அறியார் ஆதலின், அது களவோடு ஒப்பதாயிற்று. 196. பொழிப்புரை: எம் தலைவனாகிய சொற்கள் வளர்ந்து வாரா நின்ற நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு உலகம் எங்கும் பிச்சைக்குத் திரிகின்ற, சிவபெருமானுக்கு அவனது சடை முடியில் அலையை அடக்கிக் கொண்டுள்ள கங்கை நீர் தீர்த்தமாய் இருக்க,
1. ஞானசம்பந்தர் 1-77-11. 2. புறநானூறு - கடவுள் வாழ்த்து.
|