| 197. | கண்டங் கரியன் கரிஈர் உரியன்; விரிதருசீர் அண்டங் கடந்த பெருமான்; சிறுமான் தரித்தபிரான்; பண்டன்; பரம சிவனோர் பிரமன் சிரமரிந்த புண்தங்(கு) அயிலன்; பயிலார மார்பனெம் புண்ணியனே. |
| 198. | புண்ணியன்; புண்ணியல் வேலையன்; வேலைய நஞ்சனங்கக் கண்ணியன்; கண்ணியல் நெற்றியன்; காரணன்; காரியங்கும் |
அதைச் சுற்றியுள்ள தலைமாலை, அந்தத் தீர்த்தத்திற்கு உயர்த்துக் கட்டிய கரைபோன்று அமைந்து பெருமையைத் தருகின்றன. குறிப்புரை: கண்டன் - தலைவன். 'எம் கண்டனாகிய மார்பனுக்கு அவன் விரிசடைமேல்' எனக் கூட்டி யுரைக்க. சொற்கள் வளர்தலாவது, வழிவழியாக ஓதப்பட்டு வருதல். வினா - வாசனை. முன் இரண்டடிகள் சிவனைச் சிறப்பித் துணர்த்த வந்தன. "திரைவளர்" என்றதில் வளர்தல், உள்ளே பொங்குதல். தீர்த்தம் - புண்ணியப் பொய்கை. வளர்வு - வளர்ச்சி உயர்தல். சிவபெருமானது தலையலங்காரத்தையும் புகழ்ந்துரைத்தவாறு. 197. பொழிப்புரை; எமது புண்ணியத்தின் பயனாய் விளங்கும் சிவபெருமான் கண்டம் கரிய நிறமானவன்; யானை யை உரித்த தோலைப் போர்வையாக உடையவன்; சிறிய மானைக் கையில் ஏந்திய தலைவன்; பிரமனது தலைகளில் ஒன்றைச் சேதித்த குருதி பொருந்திய கூரிய படைக்கலத்தை உடையவன். எலும்பு மாலை புரள்கின்ற மார்பை உடையவன். ஆயினும் அவன் தனது இயற்கையில் அனைத்துலகங்களையும் கடந்த பெரியோன்; அநாதியன்; அதனால், 'பரம சிவன்' என்று குறிக்கப்படுபவன். குறிப்புரை: 'சிவன் தனது இயற்கை நிலையில் அனைத் திற்கும் அப்பாற்பட்டு, அருவத்தையும் கடந்து, கால இட எல்லைகளில் எதுவும் இன்றியிருப்பவனாயினும் உயிர்களின் மேல் வைத்த கருணையால் பலவேறு திருமேனிகளையும், அவற்றிற்கு ஏற்ற பெயர்களையும், செயல்களையும் உடையவன் ஆகின்றான்' என்றபடி. பரம சிவன் - சுத்த சிவன். அல்லது சொரூப சிவன். சிவன் தடத்த சிவன். 'பிரமன் தலையைக் கை உகிரால் கிள்ளினான்' என்பதே வரலாறு. ஆதலின் அதனையே இங்கு, 'படைக்கலம்' எனக் கூறினார் என்க. 'பிரமன் ஓர் சிரம் அரிந்த' எனக் கூட்டுக. 'பண்டு' என்பது ஐகாரம் பெற்று, 'பண்டை' என வருவது இங்கு ஐகாரம் பெறாது வந்தது. 'ஆரம், எலும்புமாலை' என்பது ஏற்புழிக் கோடல். 198. பொழிப்புரை; பசுக்களாகிய உயிர்கட்கெல்லாம் பதியாகிய சிவன் நல்லோருடைய புண்ணியங்களின் பயனாய் உள்ளவன்; கொடியோருடைய குருதி ஒழுகும் முத்தலை வேலை
|