| விண்ணியன்; விண்ணியல் பாணியன்; பாணி கொளவுமையாள் பண்ணியன்; பண்ணியல் பாடலன் நாடற் பசுபதியே. | | 30 |
| 199. | பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர்! கதியார் விடைஉண்டு கண்மூன் றுள;கறைக் கண்டமுண்டு கொதியார் மழுவுண்டு கொக்கரை உண்(டு)இறை கூத்துமுண்டு மதியார் சடையுள மாலுள(து) ஈவது மங்கையர்க்கே. | | 31 |
ஏந்திய தலைவன்; கடலில் தோன்றிய நஞ்சைக் கண்டத்திலே உடையவன்; எலும்பு மாலையன்; கண் பொருந்திய நெற்றியை உடையவன்; எப்பொருட்கும் காரணன்; மேகம் உலாவும் வானத்தில் விளங்குபவன்; ஆகாய கங்கையைத் தரித்தவன்; உமையவள் தாளம் இட ஆடுபவன்; பண் பொருந்திய பாடலைப் பாடுபவன். அவனையே, நெஞ்சே, நாடுக. குறிப்புரை: 'பசுபதி' என்பதை முதலிற் கொள்க. வேல், முத்தலை வேல். வேலை - கடல். அங்கம் - எலும்பு. கண்ணி - மாலை. 'விண்ணன்' என்பது இடையே இகரம் விரித்தல் பெற்று வந்தது. அடியார்கட்கு வெளிப்படுங்கால் விண்ணில் நின்று காட்சி வழங்குதல் பற்றி இறைவனை, 'விண்ணன்' என்றார். "பாணி" இரண்டில் முன்னது நீர்; பின்னது தாளம். 'உமையாற் பாணி கொளப் பண்ணியன்' என்க. பண்ணியன் - கூத்தாடுபவன். 'கோயில் திருப்பண்ணியர் விருத்தம்'1 என்றது காண்க. நாடல் - நாடுக. 'அல்' ஈற்று வியங்கோள். இதற்கு, 'அவனையே' என்னும் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. 'ஆடல்' எனப் பிரித்து, 'பல்வேறான அருள் நாடகங் களை உடைய பசுபதி' என்று எடுத்துக் கொண்டு உரைப்பினும் ஆம். இப்பொருட்குப் பாடம், 'ஆடற் பசுபதி' என்பதாகும். 199. பொழிப்புரை: பாவைபோலும் அழகை உடைய வர்களே, நம் தில்லைப் பதியில் இருப்பவராய், பிச்சை ஏற்பதற் கென்று வந்த ஒருவருக்கு வேகமாகச் செல்லும் காலை ஊர்தி ஒன்று உண்டு; கண்கள் மூன்று உள்ளன; கறை பொருந்திய கண்டம் உண்டு; வெப்பம் மிகுந்த மழு உண்டு; 'கொக்கரை' என்கின்ற வாச்சியம் உண்டு; தலைமை வாய்ந்த நடனம் உண்டு; பிறையைக் கண்ணியாகச் சூடிய முடிச் சடைகள் உள; இவையேயல்லாமல்; தம்மைக் காண்கின்ற மங்கையர்கட்குத் தருவதாக ஒரு மையலும் அவரிடம் உண்டு.
1. திருமுறை - 11. நம்பியாண்டார் நம்பிகள்
|