| 200. | மங்கைகொங் கைத்தடத்(து) இங்குமக் குங்குமப் பங்கநுங்கி அங்கமெங் குந்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான், கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்ணர வங்கள்பொங்கிப் பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே. |
| 201. | பண்டங்கள் வந்து பலிதாவென் றான்பக லோற்கிடென்றேன்; அண்டங் கடந்தவன் அன்னமென் றான்யான் ஊர்தியென்றேன்; கொண்டிங் குன்னையம்பெய் என்றான்; கொடித்தேர் அனங்கனென்றேன்; உண்டிங் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே. |
குறிப்புரை: 'அவர் யாவர் என நீவிர் அறிவீரோ? அறிவீராயின், எனக்காக அவர் பாற் சென்று, எனது மையல் நோயை உரைப்பீராக' என்பது குறிப்பெச்சம். இது தலைவன் பால் பாங்கியைத் தூதுவிடக் கருதியாள் கூற்று. எனினும் உயிர்ப் பாங்கியை நோக்கிக் கூறாது, இறைவனைப் பிரிந்து ஆற்றகில்லாத அதிதீவிர பக்குவரது நிலை இதன் உள்ளுறை. இறை - இறைமை; தலைமை. மால் - மயக்கம். 200. பொழிப்புரை: பெண்மைத்தன்மைத்தாகிய கங்கை நதியின் அலையிடையே, சீற்றம் மிக்க சிவந்த கண்களை யுடைய பாம்புகள் மிகுதியாய்ச் சடைகளின் இடையே தங்கு வதும், கொன்றை முதலிய மலர்களுக்கிடையே பிறை தங்கு வதும் ஆகிய முடியினையுடைய, பாண்டரங்கக் கூத்தனாகிய சிவபெருமான் இம்மங்கையின் கொங்கைச் சரிவிற்கு இடையே இங்கும் அழகிய குங்குமச் சேறு உடல் வெப்பத்தால் நீராகி உடம்பெங்கும் ஓட, இவள் கையில் உள்ள சங்க வளையல் களையும் கவர்ந்து அங்கே (அயலிடத்தே) செல்பவனா கின்றான். குறிப்புரை: 'இனிச் செய்வதென்' என்பது குறிப்பெச்சம். இது, நற்றாய்க்கு அறத்தொடு நிறகக் கருதும் செவிலியது கூற்று. இப்பாட்டு மெல்லிசை வண்ணக் கலித்துறையாய் நின்றது. மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கியுரைக்க. 'பாண்டரங்கன்' என்பது 'பண்டங்கன்' என மருவிற்று, பாண்டரங்கம், ஒருவகைக் கூத்து. பங்கம் - சேறு. நுங்குதல் - முழுதும் வீழ்ந்து மறைத்தல். பங்கி - தலை மயிர். அஃது இங்குச் சடையைக் குறித்தது. 201. பொழிப்புரை: 'பாண்டரங்கம்' என்னும் கூத்தினைச் செய்வோனாகிய சிவபெருமான் பிச்சாடனனாய் எங்கள் கடைத்தலையில் வந்து நின்று, இருபொருள் பட 'பலிதா' எனக் கூறினான்', அச்சொல் வெளிக்கு, 'பிச்சை இடு' எனப் பொருள் தருவதாயினும், அவன் குறும்பாக பல்லை உடையவளே, அவற்றை
|