| 202 | உற்றடி யாருல காளவோர் ஊணும், உறக்குமின்றிப் பெற்றம தாவதென் றேறும் பிரான்,பெரு வேல்நெடுங்கண் சிற்றடி யாய்வெண்பற் செவ்வாய் இவள்,சிர மாலைக்கென்றும் இற்றிடை யாம்படி யாகாவென் னுக்கு மெலிக்கின்றதே. | | 34 |
எனக்குத் தா (முத்தம் கொடு) என உள்ளுறையாக வேறொரு பொருளைத் தருதலை யான் உணர்ந்து கொண்டு, அந்த வார்த்தையை நீவிர் சூரியனிடம் சொல்லுக' என்றேன். பின்பு அவர் 'அன்னம்' என்றார். அது வெளிக்கு, 'சோறு (தா)' - எனப்பொருள் தருமாயினும், உள்ளுறையாக, 'நீ ஓர் அன்னப் பறவை போல நடக்கின்றாய்' எனப் பொருள் தருதலை யான் உணர்ந்து கொண்டு, 'ஆம்! நீர் சொல்வது பிரமதேவனுடைய ஊர்தி' என்றேன். பின்பு அவர், நீ விரைவில் கொண்டு உனது ஐயம்பெய் என்றார். அது வெளிக்கு, 'பிச்சையிடு' எனப் பொருள் தருமாயினும், உள்ளுறையாக 'உன்னிடத்து உள்ள ஐந்து அம்புகளை கொண்டு வந்து எய்' எனவும் பொருள் தருதலை யான் உணர்ந்துகொண்டு, ஆம்! அதற்கு உரியவன் மன்மதன்' என்றேன், அவரும் 'உண்மை; நீ சொல்லியன எல்லாம் பொருத்தமானவைகளே' (என்று சொல்லிவிட்டு வாயடங்கிப் போனார்). அவரது சொல்வன்மைக்குத் தக மறுமொழி சொல்ல எனக்கும் உணர்வு உண்டானது வியப்பு. குறிப்புரை: வருவித் துரைத்தன இசையெச்சங்கள். 'பாண்டரங்கன்' என்பது, 'பண்டங்கன்' என வந்தது செய்யுள் முடிபு, 'பலி' என்பது உள்ளுரைப் பொருளில் 'பல்லி' என்பதன் இடைக்குறை. பல்லி - பல்லை உடையவள். 'ஐயம்பெய்' என்பதை, 'ஐயம் பெய்' எனவும் 'ஐ அம்பு எய்' எனவும் பிரித்துக் கொள்க. அனங்கன் - மன்மதன். இது முன்பே தனது உள்ளம் சிவன் வயப்பட்டு அதனை மறைத்து ஒழுகும் தலைவியது நிலையை. அவள் தன்னிடம் மறையாது வெளிப் படுத்தற் பொருட்டுத் தோழி தானும் அந்நிலை அடைந்தது போலவும், அடையாதது போலவும் இரு பொருள் பயப்பக் கூறியது. இது, "மெய்யினும், பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டம்"1 "கயமலர் உண்கண்ணாய்" என்னும் கலித்தொகைப் பாட்டுப்போல. 202. பொழிப்புரை: தன்னைப் புகலிடமாக அடைந்த அடியார்களை (யானைமேல் உலாவந்து) உலகாள வைத்துத் தான் எருதின் மேல் ஏறிச் செல்கின்ற, அத்தகைய கருணையாளனாகிய சிவபிரான், பெரிய வேல்போன்ற, நீண்ட கண்களையும், சிறிய பாதங்களையும், வெண்மையான பற்களையும், சிவந்த வாயினையும்
1. தொல் - பொருள் - களவியல்.
|