பக்கம் எண் :

115பொன்வண்ணத் தந்தாதி

203.மெலிக்கின்ற வெந்தீ, வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு;
தலிக்கின்ற காமங் கரதலம்; மெல்லி துறக்கம்வெங்கூற்(று)
ஒலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே.

35



உடைய, என் தாயாகிய இவள் அவன் அணிந்துள்ள தலை மாலையை விரும்ப, அதனைத் தாராமல், அதன் பொருட்டு நாளும் உண்ணும், உறக்கமும் இல்லாமல், தன் இடை இயல்பிலே துவளுவது போல மேனி முழுதும் மெலிந்து போம்படி இவளை மெலியப் பண்ணுவது ஏனோ!

குறிப்புரை: 'உற்ற' என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. 'உறக்கம்' என்பது ஈற்று அம்முக்கெட்டு, 'உறக்கு' என நின்றது. பெற்றம் - எருது. ஆவது - விருப்பமாவது தாய் மகளை, 'யாய' என்றது, காதல் பற்றி வந்த மரபு வழுவமைதி. இது தலைவியது ஆற்றாமை கண்டு, சிவபெரு மானாகிய தலைவனைச் செவிலி இயற்பழித்துக் கூறியது. இதன் கொண்டு கூட்டினை அறிந்து கொள்க. "இற்று இடை ஆம்படியாக" என்பதை. 'இடையாய் இற்றிடும்படியாக' என மாற்றிவைத்து உரைக்க.

203. பொழிப்புரை: நீரின்கண் விரவிய தீ வெளித் தோன்றாது நிற்றல்போல எப்பொருளினுள்ளும் நிறைந் திருப்பவரும், ஒளி பொருந்திய மேனியை உடையவரும், மூன்று கண்களையுடைய முதல்வரும் ஆகிய சிவபெருமானாகப் பிச்சை ஏற்பவராக வேடம் பூண்டு, 'பிச்சை' என்று கேட்டு வீதியிலே வந்தார். அவர் வரவைக் கண்டதும் பவ உயிர்கள் அவரது வாசனை பொருந்திய கொன்றை மாலையைப் பெற்றுத் தாம் சூடிக்கொள்ள விரும்பி, எப்பொருளையும் அழிக்கின்ற, கொடிய தீயினிடத்து வெண்ணெயும், வெயிலிடத்து மெழுகும் போல ஆகிவிட்டன. (ஆயினும் பயன் என்ன?) தாங்கிக் கொள்கின்ற காமம் கைப்பொருளானதும், உறக்கம் அருகில் போனதுந்தாம் கண்டது. கால தூதுவர் வந்து தம்முள்முணு முணுக்கின்ற ஓசைகள் அவற்றின் காதுகளில் ஒலிக்கின்றன.

குறிப்புரை: 'இனி அவைகட்கு நிகழ இருப்பது இறந்து பாடே என்பதாம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. சூடிய - சூடுதற்கு, 'செய்யிய' என்னும் வினையெச்சம். பெண்டிரைப் பயனின்றி மெலிதல் நோக்கி, "உயிர்" என்றார். "வாய்" என்னும் ஏழன் உருபை தீக்கும் கூட்டுக. இழுது - வெண்ணெய். மெழுகு - அரக்கு. இவற்றின்பின், 'ஆயின' என்பது எஞ்சி நின்றது. 'தரிக்கின்ற' என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றதும் கரதலப் பொருளைக் "கரதலம்" என்றது ஆகுபெயர். கரதலப் பொருளாவது, கிடைத்த பொருள். மெல்லிது, இங்கு மிகக் குறைந்ததைக் குறித்தது. "கூற்றம்"