பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை116

204.பல்லுயிர், பாகம், உடல்,தலை, தோல்பக லோன்மறல்பெண்
வில்லியோர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப்
புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துங்கொண் டான்புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும்நங்கள் சூழ்துயரே.

36


205.துயருந் தொழுமழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப்
பெயரும்; பிதற்றும்; நகும்;வெய் துயிர்க்கும்; பெரும்பிணிகூர்ந்(து)
அயரும்; அமர்விக்கும் மூரி நிமிர்க்குமந்தோ!இங்ஙனே
மயரும்; மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே.

37



என்றது, கூற்றனின் தூதுவரை. அஃது ஆகுபெயராய் அவர்தம் வாயொலியைக் குறித்தது. ஒலிக்கின்ற - ஒலிக்கின்றன. இது பெருமானது பிச்சைக் கோலத்து அழகினைப் புகழ்ந்தவாறு, 'சென்றார்' என்னாது, "வந்தார்" என்றது இடவழுவமைதி, "வருவிருந்து வைகலும் ஒம்புவான்"1 என்பதிற்போல. "நீருறு தீயே" என்னும் திருவாசகத்தைக் காண்க.

204. பொழிப்புரை: பகலோனது (சூரியனது) பல்லைப் பறித்தும், மறலி (யமனது) உயிரை உதைத்துப் போக்கியும், பெண் (உமாதேவியது) ஒரு பாதியினைத் தான் பொருந்தியும், வில்லி (மன்மதனது) உடலைச் சுட்டும், ஒர் வேதியனது (பிரமனது) தலையை அறுத்தும், யானையை உரித்தும் புகழைப் பெற்ற சிவபெருமானது புகழை உரையாற் சொல்லியும், பாட்டால் பாடியும் துதித்தால் நம்மைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் அழிந்துபோம்.

குறிப்புரை: 'இது நிரல் நிறைப் பொருள்கோள்' என்பதை ஆசிரியரே, "நிரையே" என்பதனாற் குறித்தார்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

என அருளிச் செய்த வழி நிற்றற்கு இறைவனது பொருள்சேர் புகழ்களைக் கிளந்தெடுத்துக் கூறியவாறு. "துயர்" என்றது பிறவித் துயரையும் உள்ளடக்கியேயாம். 'மறலி' என்பதைத் தொழிலாகு பெயராக, "மறல்" என்றார். இது முதல்நிலைத் தொழிற் பெயர்.

205. பொழிப்புரை: (மறைக் காட்டு இறைக்கு ஆள் தகப் பட்ட வாள் நுதல்) திருமறைக்காட்டுப் பெருமானுக்கே தான் உரியளாகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொண்ட என் மகள், (அவன் வந்து தன்னை ஏற்றுக் கொள்ளாமையால்) துன்புறு வாள். தொழுவாள்; அழுவாள்; நெகிழ்கின்ற உடையும் மேகலையும் தன்னைவிட்டு நீங்கத் தான்



1. திருக்குறள் - 83.